நிபந்தனை பட்டா

நிபந்தனை பட்டா, தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையால் நிலம் இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் நிலப்பட்டா ஆகும். ஜமீன் ஒழிப்புச் சட்டம், நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, பலரிடமிருந்து அரசால் எடுக்கப்பட்ட நிலங்களை இவ்வாறு நிபந்தனைப் பட்டா நிலங்களாக பிரித்து வழங்கப்பட்டது.[1]நிபந்தனை பட்டா குறிப்பிட்ட நிபந்தனைகளின் பேரில் வழங்கப்படுகிறது.

நிபந்தனை பட்டாவிற்கான விதிகள்

தொகு
  • நிபந்தனை பட்டா பெற்றவர்கள் அந்நிலத்தை குறிப்பிட்ட ஆண்டுகள் வரை பிறர்க்கு விற்கவோ, உறவினருக்கு தானம் வழங்கவோ[2], உரிமை மாற்றம் செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது வேறு வகையில் வில்லங்கத்திற்கு உட்படுத்தவோ கூடாது. ஆனால் உயில் எழுதி வைக்கலாம்.
  • விதிமுறைகளை மீறி நிலங்களை வில்லங்கத்திற்கு உட்படுத்தும் போது, வருவாய்த் துறையினர் நிபந்தனை பட்டாக்களை இரத்து செய்து அதனை அரசு நிலங்களாக மாற்றி வருவாய்த் துறையின் பதிவேட்டில் பதிவு செய்வர்.
  • பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் பெற்ற நிபந்தனை பட்டா நிலங்களை, குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்தே அதனை பட்டியல் சமூகத்தினர்களுக்கு மட்டுமே விற்கலாம். பிற சமூகத்தினருக்கு விற்றால் அல்லது வேறு வகையில் அந்நிலத்தை வில்லங்கத்திற்கு உட்படுத்தினால், நிபந்தனை பட்டா நிலத்தை வாங்கியவர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படுவதுடன், பட்டா நிலத்தை, அரசு நிலமாக வருவாய்த் துறை பதிவேட்டில் பதியப்படும்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிபந்தனை_பட்டா&oldid=3671828" இலிருந்து மீள்விக்கப்பட்டது