நிமய் பட்டாச்சார்யா
நிமய் பட்டாச்சார்யா (Nimai Bhattacharya 10 ஏப்ரல் 1931 – 25 ஜூன் 2020) ஓர் வங்காள எழுத்தாளர் ஆவார். இவர் மகுரா மாவட்டத்தில் உள்ள சலிகாவில் பிறந்தார்.[1] இவர் 25 ஜூன் 2020 அன்று கொல்கத்தாவில் 89 வயதில் காலமானார்.
நிமய் பட்டாச்சார்யா নিমাই ভট্টাচার্য | |
---|---|
பிறப்பு | 10 April 1931 சலிகா, மகுரா மாவட்டம், பிரித்தானிய இந்தியா, வங்காளதேசம் |
இறப்பு | சூன் 25 ,2020 (aged 89) கொல்கத்தா |
தேசியம் | இந்தியன் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மெம்சாகேப் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபட்டாச்சார்யாவின் தாயார் இவருக்கு மூன்று வயதாக இருந்தபோது இறந்தார். இவர் பணிநிமித்தம் காரணமாக கிழக்கு வங்கத்திலிருந்து மேற்கு வங்கத்திற்கு குடிபெயர்ந்தார்.[1] பின்னர் கல்கத்தாவின் ரிப்பன் கல்லூரியில் ஐ.ஏ மற்றும் இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர் இவர் பத்திரிகைத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் எழுதிய ஒரு புதினம் 1963 இல் அமிர்தோபஜாரில் வெளியிடப்பட்டது.[2] இவரது அடுத்த நான்கு புதினங்கள் செய்தித்தாளில் வெளியிடப்பட்டன. அதன் பிறகு, இவர் தொழில்முறை எழுத்தாளாராக ஆனார்.
குறிப்பிடத்தக்க படைப்புகள்
தொகுஇவர் 150 க்கும் மேற்பட்ட நூல்களை எழுயுள்ளார்.[3] அமெம்சாஹேப் மிகவும் பரவலாக அறியப்பட்ட நூலாகும்.[4][5] இந்த நூலினை அடிப்படையாக வைத்து உத்தம்குமார் மற்றும் அபர்ணா சென் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஒரு திரைப்படம் வெளியானது.[6] அவரது குறிப்பிடத்தக்க புத்தகங்கள் சில:
- மெம்சாஹேப்
- மினிபஸ்
- மாடல்
- இன்குலாப்
- பேச்சலர்
- கேரணி
- ராஜதானி எக்ஸ்பிரஸ்
- ஆங்கிலோ இந்தியன்
- டார்லிங்
- யுவர் ஆனர்
- காக்டெய்ல்
- போத்தர் ஷேஷே
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "নিমাই ভট্টাচার্য বাংলাদেশেরই সন্তান". Ekushey TV. 10 February 2017. பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
- ↑ "নিমাই ভট্টাচার্য".
- ↑ "'মেমসাহেব'-এর নিমাই ভট্টাচার্য: একাত্তরের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যার পেছনেও মৌলবাদীরা ছিল". bdnews24.com. Archived from the original on 26 August 2018. பார்க்கப்பட்ட நாள் 2 July 2020.
- ↑ "'মেমসাহেব'-এর নিমাই ভট্টাচার্য: একাত্তরের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যার পেছনেও মৌলবাদীরা ছিল". bdnews24.com. Archived from the original on 26 August 2018. பார்க்கப்பட்ட நாள் 2 July 2020.
- ↑ "Nimai Bhattacharya profile". goodreads. பார்க்கப்பட்ட நாள் 2 July 2020.
- ↑ "8 Tollywood Actors Who Essayed Out Every Facet Of Being A Journalist". பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.