மகுரா மாவட்டம்

வங்காளதேசத்தின் க்ஹுல்ன்னா டிவிசன் மாவட்டம்

மகுரா மாவட்டம் (Magura District) (வங்காள மொழி: মাগুরা জেলা) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் குல்னா கோட்டத்தில் அமைந்துள்ளது. தென்மேற்கு வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மெகர்பூர் நகரம் ஆகும்.[1]மகுரா நகரம், தேசியத் தலைநகரான டாக்காவிலிருந்து 176 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

வங்காளதேசத்தில் மகுரா மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள்

தொகு

மகுரா மாவட்டத்தின் வடக்கில் ராஜ்பரி மாவட்டமும், தெற்கில் நராய்ல் மாவட்டம் மற்றும் ஜெஸ்சூர் மாவட்டமும், கிழக்கில் பரித்பூர் மாவட்டமும், மேற்கில் ஜெனிதக் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

01 மார்ச் 1984-இல் துவக்கப்பட்ட மகுரா மாவட்டம் 1039.10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தின் நிர்வாக வசதிக்காக மகுரா, சாலிகா, முகமதுபூர் மற்றும் ஸ்ரீபூர் என நான்கு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இம்மாவட்டம் ஒரு நகராட்சி மன்றமும், முப்பத்தி ஆறு கிராம ஒன்றியக் குழுக்களும், 510 வருவாய் கிராமங்களும், 711 கிராமங்களும் கொண்டுள்ளது.

இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 7600 மற்றும் தொலைபேசி குறியிடு எண் 0488 ஆகும். இம்மாவட்டம் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

884 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகுரா மாவட்டத்தின் மக்கள் தொகை 9,18,419 ஆகும். அதில் ஆண்கள் 4,54,739 ஆகவும், பெண்கள் 4,63,680 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 98 ஆண்களுக்கு, 100 பெண்கள் வீதம் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி 1.07% ஆக உள்ளது. எழுத்தறிவு 50.60% ஆக உள்ளது. மாவட்ட மக்களில் பெரும்பான்மையினர் இசுலாமியர்களாகவும், வங்காள மொழி பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி

தொகு

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

பொருளாதாரம்

தொகு

இம்மாவட்டத்தில் நவகங்கா, குமார், கோரை, மதுமதி, சித்ரா, இஷாமதி, மகுரா, பேக்பதி முதலிய ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் மிக்கதாக உள்ளது. இங்கு நெல், சணல், கோதுமை, கடுகு, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, பருத்தி, மஞ்சள், வெற்றிலை, பாக்கு, தென்னை முதலியவைகள் பயிரிடப்படுகிறது. [2]

தட்ப வெப்பம்

தொகு

இம்மாவட்டத்தின் கோடைக்காலத்தில் அதிகபட்சம் 35.6 பாகை செல்சியஸ் வெப்பமும்; குளிர்காலத்தில் குறைந்தபட்சம் 9.4 பாகை செல்சியஸ் வெப்பமும் காணப்படுகிறது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1,681 மில்லி மீட்டராக உள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், மகுரா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 23.4
(74.1)
27.7
(81.9)
33.3
(91.9)
35.6
(96.1)
34.8
(94.6)
32.4
(90.3)
31.4
(88.5)
31.4
(88.5)
32.2
(90)
31.4
(88.5)
28.9
(84)
25.5
(77.9)
30.67
(87.2)
தினசரி சராசரி °C (°F) 16.4
(61.5)
20.2
(68.4)
26.0
(78.8)
29.2
(84.6)
29.6
(85.3)
28.9
(84)
28.4
(83.1)
28.6
(83.5)
28.8
(83.8)
27.3
(81.1)
23.2
(73.8)
18.7
(65.7)
25.44
(77.8)
தாழ் சராசரி °C (°F) 9.4
(48.9)
12.8
(55)
18.7
(65.7)
22.9
(73.2)
24.5
(76.1)
25.5
(77.9)
25.5
(77.9)
25.8
(78.4)
25.6
(78.1)
23.3
(73.9)
17.5
(63.5)
12.0
(53.6)
20.29
(68.53)
பொழிவு mm (inches) 11
(0.43)
19
(0.75)
40
(1.57)
85
(3.35)
183
(7.2)
323
(12.72)
302
(11.89)
288
(11.34)
242
(9.53)
156
(6.14)
25
(0.98)
7
(0.28)
1,681
(66.18)
ஈரப்பதம் 45 35 32 48 66 74 75 74 71 66 47 44 56.4
ஆதாரம்: National newspapers

மேற்கோள்கள்

தொகு
  1. Abu Naser Majnu (2012). "Magura District". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  2. Magura District, Bangladesh
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகுரா_மாவட்டம்&oldid=2177324" இலிருந்து மீள்விக்கப்பட்டது