நியாடாக் அகதிகள் முகாம்
நியாடாக் அகதிகள் முகாம் (Niatak refugee camp) ஈரானில் அமைந்துள்ளது. இது ஈரானின் தென்கிழக்கு மாகாணமான சிச்தான் மற்றும் பலுசிஸ்த்தான் மாகாணப் பகுதியில் இருக்கிறது. ஈரானின் சாகிதன் நகருக்கு அருகில் ஆப்கானித்தான் நாட்டின் எல்லையில் இந்த அகதிகள் முகாம் அமைந்துள்ளது. 1998 ஆம் ஆண்டின் ஆவணங்களின் படி இம்முகாமில் 7,000 பேர்[1] இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டின் ஆவணங்கள் 5,000 பேர்[2] இந்த முகாமில் இருப்பதாகக் கூறுகிறது. ஆப்கான் இனக்குழுக்களுக்கு இடையேயான சச்சரவுகள் இந்த அகதிகள் முகாமிலும் தொடர்வதாக பத்திரிகையாளர் குறிப்பு ஒன்று குறிப்பிடுகிறது. குறிப்பாக பச்தூன் மற்றும் கசாரா குழுக்களுக்கிடையே பிரச்சனைகள் இருப்பதைக் குறிப்பிடுகிறது. இந்த அகதிகள் முகாம் இரானிய திரைப்பட இயக்குநர் மஹ்சன் மக்மல்பஃப் 2001 ஆம் ஆண்டில் இயக்கிய கந்தகார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ World Refugee Survey 1998. U.S. Committee for Refugees, 1998
- ↑ Z magazine, Volume 14. Institute for Social and Cultural Communications, 2001
- ↑ Mario Falsetto, Liza Béar. The Making of Alternative Cinema: Beyond the frame : dialogues with world filmmakers. Praeger, 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-275-99941-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-275-99941-4. Pg 227