மோசன் மக்மால்பஃப்

ஈரானிய திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், படத்தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர்
(மஹ்சன் மக்மல்பஃப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மோசன் மக்மால்பஃப் (Mohsen Makhmalbaf) ஓர் ஈரானிய திரைப்பட இயக்குனர், திரைப்பட படத்தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் மே மாதம் 29 ஆம் தியதி 1957- ஆம் வருடம் ஈரானின் தெஹ்ரானில் பிறந்தார். இவர் இதுவரை 20 திரைப்படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளார். 50-ற்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். 15-ற்கும் மேற்பட்ட முக்கிய திரைப்பட விழாக்களுக்கு நடுவராக இருந்துள்ளார். இவருடைய விருது பெற்ற படங்களில் "கந்தகார்" (Kandahar) மற்றும் "தி கார்டனர்" (The Gardener) போன்றவையும் அடங்கும். இவரின் திரைப்படங்கள் கடந்த 10 வருடங்களில் உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றுள்ளன. இவர் ஈரனிய சினிமாவில் புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்தவர் என கருதப்படுகிறார். "டைம்" பத்திரிகை 2001-ல் வெளிவந்த இவரது "கந்தகார்" (Kandahar) திரைப்படத்தை எப்போதுமான மிகச்சிறந்த 100 படங்களுள் ஒன்று என 2006-ல் குறிப்பிட்டிருந்தது..[1] வெனிஸ் திரைப்படத் திருவிழாவில் நடுவர் குழுவில் இவரும் ஓர் உறுப்பினர் ஆவார். 2005-ல் மகுமூத் அகமதிநெச்சாத் ஈரானின் தலைவரானதும் மோசன் மக்மால்பஃப் ஈரானைவிட்டு பாரிஸ் சென்று வாழ்ந்தார். அன்றிலிருந்து 2009 ஈரான் தேர்தலுக்கு முன்பு வரை அங்கு வசித்தார்.[2]. இவரது சில திரைப்படங்கள் ஈரானில் தடை செய்யப்பட்டுள்ளன. இவரது மனைவி மெர்ஷியா, மகள்கள் சமீரா, ஹானா மூவரும் இயக்குநர்கள். மகன் மெய்சம் ஒளிப்பதிவாளர். உலகத் திரைப்பட விழாக்களில் இவரின் குடும்பத்தினர் வாங்கிய சர்வதேச விருதுகளின் எண்ணிக்கை 89 ஆகும்.

மோசன் மக்மால்பஃப்
பிறப்புமோசன் மக்மால்பஃப்
மே 29, 1957 (1957-05-29) (அகவை 67)
தெஹ்ரான், ஈரான்
செயற்பாட்டுக்
காலம்
1981 முதல் இன்று வரை
விருதுகள்கேன்ஸ், வெனிஸ், பெர்லின், பிய்ருட்

திரைப்படங்கள்

தொகு

ஈரானில் தடைசெய்யப்பட்ட திரைப்படங்கள்

தொகு
  • டைம் ஆஃப் லவ் - Time of Love (1990) banned since 1990
  • தி நைட்ஸ் ஆஃப் ஜயாண்டே-ரூட் - The Nights of Zayande-rood (1990)), banned since 1990
  • பிரட் அண்ட் ப்ளவர் - பாட் - Bread and Flower-pot (1995), banned from 1995 until 1997
  • தி சைலன்ஸ் - The Silence (1997 film)) (1997), banned from 1997 until 2000
  • நஸீர் -உத்-தின் ஷா - Naser-ed-din Shah (1991), banned from 1992 until 1993

தோன்றிய திரைப்படங்கள்

தொகு
  • தி மேரேஜ் ஆஃப் பிளஸ்டு - The Marriage of the Blessed (1988)
  • குளோஸப் - Close-up (1988)
  • ஹலோ சினிமா - Hello Cinema (1994)
  • பிரட் அண்ட் ப்ளவர் - பாட் - Bread and Flower-pot (1995)
  • தி டெஸ்ட் ஆஃப் டெமாக்ரஸி - The Test of Democracy (1999)

மேற்கோள்கள்

தொகு
  1. "All-Time 100 Movies". Time. February 12, 2005 இம் மூலத்தில் இருந்து மார்ச் 5, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100305211915/http://www.time.com/time/2005/100movies/0,23220,kandahar,00.html. பார்த்த நாள்: May 13, 2010. 
  2. Guardian 2009 article

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோசன்_மக்மால்பஃப்&oldid=3256051" இலிருந்து மீள்விக்கப்பட்டது