அலிஃபே- இ ஆஃப்கான் (திரைப்படம்)
அலிஃபே- இ ஆஃப்கான் (பாரசீக மொழி: الفبای افغان, Alefbay-e afghan) எனும் பாரசீக மொழித் திரைப்படம் தி ஆஃப்கான் ஆல்பபட் (The Afghan Alphabet) எனும் ஆங்கிலப் பெயரிலும் வெளியிடப்பட்டது. இத்திரைப்பட தலைப்பின் பொருள் ஆப்கானிய எழுத்து ஆகும். இப்பாரசீக மொழித் திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் ஆவணப்படம் வகையைச் சார்ந்தது. ஈரானிய இயக்குநர் மோசன் மக்மால்பஃப் ஆல் இயக்கப்பட்டது இத்திரைப்படம்.
அலிஃபே- இ ஆஃப்கான் | |
---|---|
இயக்கம் | மோசன் மக்மால்பஃப் |
இசை | முகம்மத் ரேஸா டார்விஷி |
நாடு | ஈரான் |
கதை
தொகுஈரான் எல்கைக்கு அருகில் இருக்கும் ஆஃப்கான் கிராமம் ஒன்றின் குழந்தைகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது இத்திரைப்படம். தாலிபான்களால் அவர்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் எவ்வாறு பாதிக்க்கப்பட்டது என்பதைப் பற்றியது இத்திரைப்படம்.[1]
இத்திரைப்படத்தின் தாக்கம்
தொகு2002 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 30,00,000 ஆஃப்கான் அகதிகள் ஈரானில் வசித்தனர். அவர்களில் 7,00,00 பேர் குழந்தைகள். இக்குழந்தைகள் சட்டவிரோதமாக ஈரானில் தங்கியிருப்பதால் அவர்கள் கல்வி கற்க பள்ளிக்கு அனுமதிக்கப்படவில்லை.[2] இத்திரைப்படம் வெளியான பின்பு இந்த விசயம் சர்ச்சைக்குரிய விசயமாக ஈரானில் பேசப்பட்டது. இறுதியாக இக்குழந்தைகள் கல்வி கற்கலாம் எனும் சட்ட வரைவு ஏற்படுத்தப்பட்டு அதன் விளைவாய் 5,00,000 குழந்தைகள் கல்வி பெற்றனர்.
நடிகர்கள்
தொகு- ஹாஃபோர் பராஹோயி (Ghafour Barahouyi)
- மார்யம் ஓஸ்பாக் (Maryam Ozbak)
- மோசன் மக்மால்பஃப்
விருதுகளும் திரைப்பட விழாக்களும்
தொகு- ஜெர்மனி சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருது. (2002 ஆம் ஆண்டு)[2]
- ஈரான் சர்வதேச திரைப்பட விழா 2002
- ஹோட்டிபெர்க் சர்வதேச திரைப்பட விழா 2003
- ரியோ சர்வதேச திரைப்பட விழா 2003
- ஹாங்காங் சர்வதேச திரைப்பட விழா 2003
- கிரீஸ் சர்வதேச திரைப்பட விழா 2002
- புஷான் சர்வதேச திரைப்பட விழா 2003
- அமெரிக்க ஆவண திரைப்பட விழா 2002
- சியாட்டில் சர்வதேச திரைப்பட விழா 2002
- கனடா மான்ரீல் திரைப்பட விழா 2002
- தோக்கியோ சர்வதேச திரைப்பட விழா 2002
- தென் கொரியா சர்வதேச திரைப்பட விழா 2002
- சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழா 2003
- ஹங்கேரி தொலைக்காட்சி விழா 2006
வெளி இணைப்புகள்
தொகு- இணையதளம்
- பிரிட்டீஷ் பிலிம் இன்ஸ்டிடியூட் பரணிடப்பட்டது 2013-03-07 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-28. பார்க்கப்பட்ட நாள் 2013-10-21.
- ↑ 2.0 2.1 "BBC فارسی - فرهنگ و هنر - الفبای افغان در برنامه آپارات". BBC Online (in Persian). பார்க்கப்பட்ட நாள் 30 June 2013.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)