நியூட்டன் வினாடி
இயற்பியலில் நியூட்டன் வினாடி (newton second அல்லது newton-second, நியூட்டன்-செக்கன், குறியீடு: N s அல்லது N·s)[1] என்பது is the derived கணத்தாக்கத்தின் அனைத்துலக முறை அலகில் இருந்து பெறப்பட்ட அலகு ஆகும். இது உந்தத்தின் அலகான கிலோகிராம் மீட்டர் / செக்கன் (கிகி·மீ/செ) இற்கு பரிமாண அளவில் சமமாக உள்ளது. ஒரு நியூட்டன் வினாடி ஒரு வினாடியில் செயல்படும் ஒரு நியூட்டன் விசையைக் குறிக்கிறது.
நியூட்டன் வினாடி newton second | |
---|---|
இரண்டு பொருள்கள் ஒரே திசைவேகத்தில் செல்லும் போது அதிக எடையுள்ள பொருளுக்கு அதிக உந்தம் (p) இருக்கும் | |
பொது தகவல் | |
அலகு முறைமை | அனைத்துலக முறை அலகுகள் |
அலகு பயன்படும் இடம் | கணத்தாக்கமும் உந்தமும் |
குறியீடு | N s |
பெயரிடப்பட்டது | ஐசாக் நியூட்டன் |
SI அடிப்படை அலகுகளில்: | kg ⋅ m/s |
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு பொருளின் மீது செயல்படும் விசையைப் பயன்படுத்தி தொகுபயன் திசைவேகத்தை கண்டுபிடிக்க இது பயன்படுகிறது.
வரையறை
தொகுஉந்தம் கீழே கொடுக்கப்பட்டுள்ள சமன்பாட்டை பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம்.
- p என்பது உந்தம். அதன் அலகு நியூட்டன் வினாடி.அல்லது கிலோகிராம் மீட்டர்/வினாடி (kg·m/s)
- m எனபது நிறை. அதன் அலகு மீட்டர்.
- v என்பது திசைவேகம்.அதன் அலகு மீட்டர் / வினாடி (m/s)
எடுத்துக்காட்டு
தொகுபல்வேறு நிறை மற்றும் திசைவேகங்களுடைய பொருட்களின் உந்தம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறை (kg) |
வேகம் (m/s) |
உந்தம் நியூட்டன் |
விளக்கம் |
---|---|---|---|
0.1 | 10 | 1 | 100 கிராம் தக்காளி பூமியிலிருந்து 1 மீட்டர் தொலைவிலிருந்து போடப்படுகிறது. |
0.42 | 2.4 | 1 | 450 கிராம் கால்பந்து 8.6 km/h வேகத்தில் உதைக்கப்படுகிறது. |
0.42 | 38 | 16 | பிரேசில் வீரர் ரோபர்ட் கார்லோஸ் 1997 ஆம் ஆண்டு பிரான்சுக்கு எதிராக விளையாடியபோது உதைத்த திசைவேகம். |
1500 | 16.7 | 25,050 | 1.5 டன் எடையுள்ள ஒரு கார் 60 km/h வேகத்தில் செல்லும் போது மோதுகிறது. |
2,600 | 16.7 | 43,420 | 2.6 டன் எடையுள்ள ஒரு வாகனம் 60 km/h வேகத்தில் செல்லும் போது மோதுகிறது. |
6 | 1 | 6 | C வகை இராக்கெட்டில் உருவாகும் கணத்தாக்கு விசை |
10 | 2 | 20 | D வகை இராக்கெட்டில் உருவாகும் கணத்தாக்கு விசை |
2,030,000 | 8050 | 1.63x1010 | புவியிலிருந்து வட்டப்பாதைக்கு தாவும் விண்கலத்தின் கணத்தாக்கு விசை |
45,702 | 10834 | 4.95x108 | அப்பல்லோ 11 விண்கலம் வட்டப்பாதைக்கு தாவும் போது உருவாகும் உந்தம். |
0.0075 | 350 | 2.6 | துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டாவின் உந்தம் |
0.004 | 945 | 3.8 | 4 கிராம் பிஸ்டலில் இருந்து வரும் தோட்டாவின் உந்தம் |
0.05 | 860 | 43 | 50 கிராம் ரைபிள்ளிலிருந்து தோட்டா வெளிபவரும் போது ஏற்படுக்ம் உந்தம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ International Bureau of Weights and Measures (2006), The International System of Units (SI) (PDF) (8th ed.), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-822-2213-6