நியூபியன் ஆடு

ஆங்கிலோ-நியூபியன் ஆடு என்பது பிரித்தானிய வளர்ப்பு ஆட்டு இனமாகும். இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் பூர்வீக பிரித்தானிய ஆடுகள் மற்றும் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய லாப்-ஈயர் ஆடுகளின் கலப்பு இனம் ஆகியவற்றுக்கு இடையேயான கலப்பினங்களில் இருந்து உருவானது.[3]:{{{3}}} இது பெரிய, ஊசல் காதுகளைக் கொண்டுள்ளது. இது உலகின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது, மேலும் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுகிறது.[4]:{{{3}}} பல இடங்களில் இது நியூபியன் ஆடு என்று அழைக்கப்படுகிறது.[4]:{{{3}}}

ஆங்கிலோ-நியூபியன்
நீண்ட காதுகள் கொண்ட வெள்ளை பட்டைக் கொண்ட செம்பழுப்பு நிற ஆடு, அதே நிறத்திலான குட்டிகளுடன்
நிலை
மற்றொரு பெயர்நியூபியன்
தோன்றிய நாடுஐக்கிய இராச்சியம்
பரவல்அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகள்
பயன்இறைச்சி, பால் என இரட்டை நோக்கம்
பண்புகள்
எடைஆண்: 140 kg (310 lb)வரை
 பெண்: 110 kg (240 lb)வரை
உயரம்ஆண்: சராசரி: 90 cm (35 அங்)
 பெண்: சராசரி: 80 cm (31 அங்)
Horn statusபொதுவாக கொம்பற்ற நிலை அல்லது சிறிய கொம்புகளுடன்
ஆடு

வரலாறு

தொகு

இதன் தாயகம் ஆப்பிரிக்காவின் வட கிழக்குப் பகுதியாயினும் அரேபியா, இந்தியாவிலும் காணப்படும். இந்த இன ஆடுகளுக்கு நீண்ட கால்களும் உறுதியான உடற்கட்டும் உண்டு. இப்பண்பு ஆடு வளர்ப்போரால் இங்கிலாந்தில் விரும்பப்படுகிறது. இங்கிலாந்தில் ஆடு வளர்ப்போர் 1895ம் ஆண்டுக்கு முன்பிருந்தே இந்த இன ஆட்டுக்கிடாய்களை ஆப்பிரிக்கா, அரேபியா, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து ஆங்கிலோ நியூபியன் இனத்தினை உருவாக்கினர்.

 
நியூபியன் ஆடு

சிறப்பியல்புகள்

தொகு

நியூபியன் இனம் மேல்மட்ட ஆடு எனப்படுகிறது. காதுகள் நீண்டு, தலைக்குப் பக்கத்தில் தொங்கிக்கொண்டிருக்கும். நியூபியன் ஆடு கூரான மூக்கும் குட்டை முடியும் கொண்டது. இன ஆடு ஒரே நிறமாகவோ, நிறக்கலவைகளுடனோ காணப்படும். பொதுவாகக் கறுப்பு, சிவப்பு, பழுப்பு நிறங்கள் தனித்தோ வெண்மை கலந்தோ காணப்படும். இனக் கிடாக்களின் மேல் குட்டையான முடிகள் முதுகு, தொடைகளின் மேல் காணப்படும். இவை ஏனைய சுவிட்சர்லாந்து இன ஆடுகளிலும் காணப்படுகின்றன.

நியூபியன் இன ஆடுகளின் மடி பெரியதாகவும், சுவிட்சர்லாந்து இன ஆடுகளின் மடிகளைவிடத் தொங்கலாகவும் காணப்படும். நன்றாக அமைந்த உறுதியாகப் பிணைக்கப்பட்ட மடி சிறப்பிடம் பெறும். வளர்ந்த பெண் ஆடு 30 அங்குல உயரமும் குறைந்தது 135 பவுண்ட் எடையும் கொண்டிருக்கும். கிடாக்கள் 35 அங்குல உயரமும் குறைந்தது 175 பவுண்ட் உடல் எடையும் கொண்டிருக்கும். நியூபியன் இனம் சுவிட்சர்லாந்து இனங்களை விட குறைவான அளவே பால் தரும். எனினும் இதன் பாலில் கொழுப்புச் சத்து மிகுதியாகும்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Barbara Rischkowsky, Dafydd Pilling (editors) (2007). List of breeds documented in the Global Databank for Animal Genetic Resources, annex to The State of the World's Animal Genetic Resources for Food and Agriculture. Rome: Commission on Genetic Resources for Food and Agriculture, Food and Agriculture Organization of the United Nations. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789251057629. Archived 23 June 2020.
  2. Breed data sheet: Nubian & Anglo-Nubian / United Kingdom (Goat). Domestic Animal Diversity Information System of the Food and Agriculture Organization of the United Nations. Accessed November 2023.
  3. Valerie Porter, Lawrence Alderson, Stephen J.G. Hall, D. Phillip Sponenberg (2016). Mason's World Encyclopedia of Livestock Breeds and Breeding (sixth edition). Wallingford: CABI. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781780647944.
  4. 4.0 4.1 Transboundary breed summary: Goat: Anglo Nubian. Domestic Animal Diversity Information System of the Food and Agriculture Organization of the United Nations. Accessed November 2023.
  5. அறிவியல் களஞ்சயம் தொகுதி 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூபியன்_ஆடு&oldid=4047955" இலிருந்து மீள்விக்கப்பட்டது