நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி
நியூஸ்7தமிழ் என்பது அக்டோபர் 30, 2014 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழ் மொழி 24 மணி நேர செய்தி தொலைக்காட்சி சேவை ஆகும். இது விவி குரூப்பு நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 30 அக்டோபர் 2014 |
உரிமையாளர் | விவி குரூப்பு |
கொள்கைக்குரல் | பொறுப்பும் பொதுநலனும் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு |
வலைத்தளம் | www |
ஆசிரியர் குழு
தொகுஅல் ஜசீராவில் பணியாற்றிய நிக் வால்ஸ், நீதிபதி வெங்கடராமன், கவிஞர் மீனா கந்தசாமி ஆகியோரைக் கொண்ட ஆசிரியர் குழு இந்தத் தொலைக்காட்சியை வழிநடத்தும் என தெரிவிக்கப்பட்டது.[1].
உரிமையாளர்கள்
தொகுசுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள 'விவி மினரல்ஸ் குழு' முக்கிய உரிமையாளர் ஆகும். அலையன்ஸ் பிராட்காஸ்ட் எனும் நிறுவனப் பெயரின்கீழ், இந்த தொலைக்காட்சி அலைவரிசை செயல்படும்[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ "News 7 hopes to present views through Tamil lens". தி இந்து. 2 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2014.
- ↑ "News7 Tamil to launch on 19 October". indiantelevision.com. 9 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2014.