நியூ யார்க் அரசுப் பல்கலைக்கழகம்

நியூயார்க் அரசுப் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது. இங்கு 465,000 மாணவர்கள் பயில்கின்றனர். இது 64 வளாகங்களைக் கொண்டுள்ளது. இந்த வளாகங்களில் 11 லட்சம் முதுநிலை மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு 88,000 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு 7,660 பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பை வழங்குகின்றனர்.[2] இது அல்பானி, பஃபலோ, பிங்காம்டன், ஸ்டோனி புரூக் ஆகிய நான்கு மையங்களைக் கொண்டுள்ளது. இதன் நிர்வாகக் கட்டிடம் அல்பானி நகரில் உள்ளது.

நியூ யார்க் அரசுப் பல்கலைக்கழகம்
State University of New York
குறிக்கோளுரைகற்க, தேட, சேவையாற்ற
To learn, to search, to serve
வகைபொது
உருவாக்கம்1948
கல்வி பணியாளர்
88,024[1]
மாணவர்கள்467,991
பட்ட மாணவர்கள்427,403[1]
அமைவிடம்
மாநில அளவில்
, ,
வளாகம்64 வளாகங்கள்campuses[1]
நிறங்கள்நீலம்
சுருக்கப் பெயர்SUNY
இணையதளம்suny.edu

அமைப்பு

தொகு

இந்த பல்கலைக்கழகத்திற்கான செயல்பாடுகளை நிர்வாகக் குழுவினர் மேற்கொள்கின்றனர். இந்தக் குழுவில் 18 உறுப்பினர்கள் உண்டு. இவர்களில் 15 பேரை, நியூ யார்க் சட்டமன்றத்தின் ஒப்புதலோடு, நியூ யார்க் மாகாண ஆளுனர் நியமிப்பார். மாணவர்களின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் பதினாறாவது உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிரியர்களின் தலைவரும், மற்றைய கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கான கூட்டமைப்பின் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் இருவரும் போட்டியின்றி, வாக்கெடுப்பின்றி தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த பல்கலைக்கழகத்திற்கான நிதி உதவியை நியூ யார்க் மாகாண அரசு வழங்கும்.

வளாகங்கள்

தொகு

இந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளும் நியூ யார்க் மாகாணத்தில் உள்ளன. ஜேம்ஸ்டவுன் கம்யூனிட்டி கல்லூரி மட்டும் பெனிசில்வேனியாவில் உள்ளது.[3]

விளையாட்டு

தொகு

ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனி விளையாட்டுக் குழுக்களும் போட்டிகளும் உண்டு.

மேலும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 SUNY FAST FACTS
  2. Applebome, Peter (2010-07-23). "The Accidental Giant of Higher Education". NYTimes.com. பார்க்கப்பட்ட நாள் 2011-11-10.
  3. "JCC Warren, PA Center". Jamestown, New York: Jamestown Community College. பார்க்கப்பட்ட நாள் 2011-02-13.

இணைப்புகள்

தொகு