நியூ விமன்
New Woman
இதழாசிரியர்ஹேம மாலினி
வகைஆடை அலங்கார வடிவமைப்பு பத்திரிகைகள்
இடைவெளிமாதந்தோறும்
நுகர்வளவு100,008
தொடங்கப்பட்ட ஆண்டுதிசம்பர் 1996
நிறுவனம்பயோனியர் தனியார் புத்தக நிறுவனம்
நாடுஇந்தியா
அமைவிடம்மும்பை[1]
மொழிஆங்கிலம்
வலைத்தளம்www.newwomanindia.com

நியூ விமன் (புதிய பெண்)(New Woman) என்பது இந்திய வாழ்க்கை முறை இதழ்.[2] இது பயனியர் தனியார் புத்தக நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.[3] புதிய பெண் இந்தியாவின் மும்பையை மையமாகக் கொண்டு வெளியிடப்படுகிறது. ஹேமா மாலினி இதன் ஆசிரியர்.[4]

வரலாறு மற்றும் சுயவிவரம்

தொகு

நியூ விமன் இதழின் முதல் பதிப்பு டிசம்பர் 1996-ல் வெளியிடப்பட்டது.[5]

நியூ விமன் இதழ், அழகு, அலங்காரம், அழகுசாதனப் பொருட்கள், ஆடைகள், அணிகலன், சமீபத்திய தயாரிப்புகள், உடற்பயிற்சி, உடல்நலம், நிதி, தொழில், சுய உதவி, உறவுகள், பாலினம், பெற்றோர், பயணம், கலை, இசை, புத்தகங்கள், திரைத்துறை, சமூகப் பிரச்சினைகள், சட்ட விடயங்கள், நிறுவனம் மற்றும் உணவு முதலியவற்றில் பெண்கள் குறித்து கவனம் செலுத்தி ஆழமான கட்டுரைகள், பிரமிக்க வைக்கும் புகைப்பட அம்சங்கள், அழகு பரவல்கள், புனைகதை மற்றும் மிகவும் உத்வேகம் தரும் நேர்காணல்கள் என வெளியிடுகிறது. நியூ விமன் சமகால மற்றும் வழமையான மொழியில் பெண்களின் வாழ்க்கையின் அம்சங்களை உள்ளடக்கியது.

ஆசிரியர்

தொகு

நடிகையும், நடனக் கலைஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமா மாலினியின் தொகுப்பாசிரியர் மற்றும் தலைமையின் கீழ் புதிய பெண்மணி பெரும் முன்னேற்றம் அடைந்து. பெண்கள் இதழியல் துறையில் குறிப்பிடத்தக்க முத்திரையைப் பதித்துள்ளது. நியூ விமன் 1, 00,008 பிரதிகள் விற்பனையுடன் 3, 50,000 வாசகர்களை கொண்டுள்ளது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Pioneer Book Company Private Limited based in Mumbai - Contact".
  2. "India as a Writer's Market". Writing World. Archived from the original on 2011-06-17. பார்க்கப்பட்ட நாள் 2023-03-28.
  3. Dana McLachlin; Tara Dhakal; Pramada Menon (Spring 2012). "For All the Women You Are: National Identity, Gender, and Tradition/Modernity in Indian Women's Magazines". School for International Training India. பார்க்கப்பட்ட நாள் 26 July 2016.
  4. "Dream role -Hema Malini to be editor of The New Woman magazine". India Today.
  5. Amrita Madhukalya (19 July 2015). "Of recipes and G-spots: On India's 'magazine era'". dna. http://www.dnaindia.com/lifestyle/report-of-recipes-and-g-spots-on-india-s-magazine-era-2105879. பார்த்த நாள்: 25 September 2016. 
  6. Vetticad, Anna (June 12, 2013). "Hema Malini to be editor of The New Woman magazine" (in en). இந்தியா டுடே. https://www.indiatoday.in/magazine/eyecatchers/story/19961215-hema-malini-to-be-editor-of-the-new-woman-magazine-834194-1996-12-15. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_விமன்&oldid=4110149" இலிருந்து மீள்விக்கப்பட்டது