நியோடிமியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு
நியோடிமியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு (Neodymium(III) acetylacetonate) என்பது Nd(O2C5H7)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பல ஆதாரங்கள் இந்த நீரற்ற அசிட்டைலசிட்டோனேட்டு அணைவுச் சேர்மத்தைப் பற்றி விவாதித்தாலும், இது ஓர் இருநீரேற்றாகும்.Nd(O2C5H7)3(H2O)2. எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளன.[2] பொதுவாக நியோடிமியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு வெள்ளை நிறத்தில் பொடியாக உருவாகிறது.[1][3] வெற்றிடத்தின் கீழ் வெப்பப்படுத்தப்பட்டால் மற்ற இருநீரேற்று லாந்தனைடு திரிசு அசிட்டோலைசிட்டோனேட்டுகள் ஆக்சோ -கொத்துகளாக மாறுகின்றன. இந்த முடிவு Nd(O2C5H7)3 இயற்கையில் இல்லாமலிருக்கலாம் என்று கூறுகிறது.[4]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
நியோடிமியம் அசிட்டைலசிட்டோனேட்டு, திரிசு(அசிட்டைலசிட்டோனேட்டோ)நியோடிமியம்
| |
இனங்காட்டிகள் | |
64438-52-4 இருநீரேற்று 34777-51-0 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C15H25NdO8 | |
வாய்ப்பாட்டு எடை | 477.60 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான தூள்[1] |
உருகுநிலை | 150 °C (302 °F; 423 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுநியோடிமியம் ஆல்காக்சைடுடன் அசிட்டைலசிட்டோனேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்து[5] அல்லது அசிட்டைலசிட்டோனில் உள்ள நியோடிமியத்தை மின்னாற்பகுப்பு செய்து நியோடிமியம்(III) அசிடைலேசெட்டோனேட்டை உருவாக்கலாம்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Pierson, H.O. (1999). Handbook of Chemical Vapor Deposition: Principles, Technology and Applications. Materials Science and Process Technology. Elsevier Science. p. 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8155-1743-6. Archived from the original on 2021-10-17. பார்க்கப்பட்ட நாள் 2021-09-16.
- ↑ Aslanov, L. A.; Porai-Koshits, M. A.; Dekaprilevich, M. O. (1971). "Crystal Structure of Neodymium Trisacetylacetonate Dihydrate". Journal of Structural Chemistry 12 (3): 431–434. doi:10.1007/BF00744630. https://archive.org/details/sim_journal-of-structural-chemistry_1971-06_12_3/page/431.
- ↑ Phillips, Theodore; Sands, Donald E.; Wagner, William F. (1968). "Crystal and Molecular Structure of Diaquotris(acetylacetonato)lanthanum(III)". Inorganic Chemistry 7 (11): 2295–2299. doi:10.1021/ic50069a024.
- ↑ Tamang, Sem Raj; Singh, Arpita; Bedi, Deepika; Bazkiaei, Adineh Rezaei; Warner, Audrey A.; Glogau, Keeley; McDonald, Corey; Unruh, Daniel K. et al. (2020). "Polynuclear Lanthanide–Diketonato Clusters for the Catalytic Hydroboration of Carboxamides and Esters". Nat. Catal. 3: 154–162. doi:10.1038/s41929-019-0405-5.
- ↑ Gavrilenko, V. V.; Chekulaeva, L. A.; Savitskaya, I. A.; Garbuzova, I. A. Synthesis of yttrium, lanthanum, neodymium, praseodymium and lutetium alkoxides and acetylacetonates{{நாட்டுத் தகவல் {{{1}}} | flaglink/core | variant = | size = | name = | altlink = national rugby union team | altvar = rugby union}}. Izvestiya Akademi Nauk, Seriya Khimicheskaya, 1992. 11: 2490-2493. பன்னாட்டுத் தர தொடர் எண் 1026-3500.
- ↑ Panyushkin, V. T.; Frolov, V. Yu.; Zelenov, V. I. Electrochemical synthesis of rare-earth metal acetylacetonates. Russian Journal of General Chemistry (Translation of Zhurnal Obshchei Khimii), 2001. 71 (8): 1318.