நியோமா, இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியின் தென்கிழக்கில் லடாக் மலைத் தொடரில் அமைந்த கிராம ஊராட்சி ஆகும். இது லே மாவட்டத்தில் உள்ள நியோமா வருவாய் வட்டத்தின்[1] தலைமையிடம் ஆகும். இது லே நகரத்திற்கு தென்கிழக்கில் 180.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சிந்து ஆறு இப்பகுதியில் பாய்கிறது. நியோமா கிராமம் லடாக் மலைத்தொடரில் 4,180 மீட்டர் (13,710 அடி) உயரத்தில் உள்ளது. 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 918[2]ஆகும். இதன் மக்கள் தொகையில் 707 பேர் பழங்குடி மக்களாக உள்ளனர்.. இக்கிராமத்தில் லடாக்கி மொழி, இந்தி மற்றும் ஆங்கிலம் பேசப்படுகிறது. இங்கு பௌத்த மடாலயம் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோமா&oldid=4042369" இலிருந்து மீள்விக்கப்பட்டது