நிரங்காரி
நிரங்காரி (Nirankari) இந்தி: निरंकारी) எனில் உருவமற்ற இறைவனை வழிபடுபவர் என்று பொருள். நிரங்காரிப் பிரிவு சீக்கிய சமயத்தின் ஒரு உட்பிரிவாகும்.[1] இப்பிரிவை தற்கால சீக்கியர்கள் ஆதரிப்பதில்லை. 1980-இல் பஞ்சாபில் அகால் தக்த் சீக்கியர்களுக்கும், நிரங்காரி பிரிவு சீக்கியர்களுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக நிரங்காரி பிரிவினரை போலி நிரங்காரிகள் என அழைக்கப்பட்டனர்.[2]
உருவாக்கம் | 1790களில் |
---|---|
சேவை பகுதி | சீக்கியம் |
ஆட்சி மொழி | பஞ்சாபி |
தலைவர் | பாபா தயாள் சிங் |
தற்கால பாகிஸ்தான் நாட்டின் [ [பஞ்சாப், பாகிஸ்தான்|பஞ்சாப்]] மாகாணத்தின் ராவல்பிண்டி நகரத்தில் பாபா தயாள் சிங் (1785-1855) என்பவர் சீக்கிய சமயத்தின் நிரங்காரி பிரிவை நிறுவினார். இவர் சீக்கியப் பேரரசர் ராஜா ரஞ்சித் சிங்கின் சமகாலத்தவர் ஆவார். [3] பாபா தயாள் பாபா தயாள் சிங்கின் வாரிசு பாபா தர்பார் சிங் என்பவர் குரு பாபா தயாள் சிங்கின் சீக்கிய சமய சீர்திருத்தக் கொள்கைகளையும்; கோட்பாடுகளையும் ராவல்பிண்டி நகரத்திற்கு வெளியே பரப்பினார். குரு சாகிப் ரத்தாஜி (1870-1909) காலத்தில் பல ஆயிரக்கணக்கானவர்கள் நிரங்காரி சீக்கிய சமயப் பிரிவை பின்பற்றுபவர்களாக இருந்தனர்.[3]
1929-இல் நிரங்காரி சமயப்பிரிவில் இருந்து சந்த் நிரங்காரி இயக்கம் உருவாயின. இவ்வியக்கம் சீக்கிய சமயத்தின் முதல் பத்து குருமார்கள் தொகுத்த குரு கிரந்த சாகிப்பிற்கு பிறகு வாழும் குருவை இறைவனாக கருதினர். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 1947-இல் நிரங்காரி சீக்கிய சமயப் பிரிவை பாகிஸ்தான் நாட்டில் தடை செய்யப்பட்டதால், இந்தியாவில் அதன் தலைமையிடத்தை நிறுவினர்..
பின்பற்றுபவர்கள்
தொகு1891-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்துக்களில் 14,001 நபர்களும்; சீக்கியர்களில் 46,610 நபர்களும் நிரங்காரி சீக்கியப் பிரிவை பின்பற்றுபவர்கள் எனத் தெரிகிறது.[4]
கொள்கைகள்
தொகுஅனைத்துப் பெருமைகளும் உருவமற்ற ஒருவனுக்கே உரியதும் என்றும்; சீக்கிய முதல் பத்து குருக்களால் அருளப்பட்ட குரு கிரந்த் சாகிப் என்ற நூலே தங்களின் வேதம் என்பர். சிலை வழிபாடு, சமயச் சடங்குகள் குறிப்பாக இசுலாமிய - இந்து சமயத்தவர்களின் சமயச் சடங்குகளை பின்பற்றக் கூடாது என்பதும்; சோதிடம் பார்ப்பது, மது அருந்துவது, புகை பிடிப்பது கூடாது என்பதும் இவர்களது முக்கியக் கொள்கையாகும்.
கல்சா உணர்வு
தொகுநிரங்காரிகள் கல்சா உணர்வுடன் இருக்க தன்னிடம் ஐந்து பொருட்களை எப்போதும் தக்க வைத்துக் கொண்டும்; தன்னிடம் இருக்கக் கூடாத நான்கு தீய குணங்களை நீக்கி வைத்து கொண்டிருப்பவனாக இருத்தலே கல்சா உணர்வாகும்.
ஐந்து பொருட்கள்
தொகுநிரங்காரி சீக்கியனின் உடலில் கட்டாயம் இருக்க வேண்டிய ஐந்து பொருட்கள்;
- தலைப்பாகை
- மரச்சீப்பு
- இடையில் வளைந்த குறுவாள் வைத்திருத்தல்
- கையில் இரும்பு வளையல் அணிதல்
- கேஷ்ரா எனும் அரைக்கால் உள்ளாடை அணிதல்[5]
தடை செய்யப்பட்ட நான்கு
தொகுநிரங்காரி சீக்கியர்கள் செய்யக் கூடாதவைகள்;
- முடியை மழிக்கவோ அல்லது கையால் நீக்காதிருத்தல்.
- மீன் மற்றும் முட்டைகளை உண்ணாதிருத்தல்.
- மனைவி தவிர பிற பெண்களிடம் தகாத உறவு வைக்காமல் இருத்தல்.
- புகையிலைப் பொருட்கள் மற்றும் போதை மருந்துகள் பயன்படுத்தாதிருத்தல்; முரட்டு மயிர்கள் கொண்ட கம்பிளி உடைகளை அணியாதிருத்தல்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nirankari". Encyclopedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 20 December 2014.
- ↑ "Nirankari Movement (1850's)". Archived from the original on 2016-05-16. பார்க்கப்பட்ட நாள் 2016-04-28.
- ↑ 3.0 3.1 McLeod, W.H. Textual Sources for the Study of Sikhism Manchester University Press ND, 1984
- ↑ (Census of India, 1891, Vol.XX, and vol.XXI, The Punjab and its Feudatories, by Sir Edward Douglas MacLagan, Part II and III, Calcutta, 1892, pp. & 826–9 and pp.& 572–3.)
- ↑ "Kashera". Archived from the original on 2017-09-16. பார்க்கப்பட்ட நாள் 2016-04-28.