நிரஞ்சன் சென்குப்தா
நிரஞ்சன் சென்குப்தா (Niranjan Sengupta) (26 ஜூலை 1904 - 4 செப்டம்பர் 1969) ஒரு வங்காள இந்திய புரட்சியாளர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் ஆவார். அவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவராக இருந்தார். இவர் பரிசலின் சலோகாதி மாவட்டத்தில் பிறந்தார்.
நிரஞ்சன் சென்குப்தா | |
---|---|
নিরঞ্জন সেনগুপ্ত | |
மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1957 - 1962 | |
தொகுதி | பிசப்பூர் |
மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1962 - 1967 1967 - 1968 1969 | |
தொகுதி | டோலிகஞ்ச் |
அகதிகள், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு மற்றும் சிறைகள் அமைச்சர், மேற்கு வங்க அரசு | |
பதவியில் 1967 - 1968 1969 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26.07.1904 பாரிசல், பிரிட்டிசு இந்தியா (நவீன வங்காளதேசம்) |
இறப்பு | 04.09.1969 (வயது 65) கொல்கத்தா, இந்தியா |
குடியுரிமை | இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடைமைக் கட்சி (1938 - 1964) இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (1964 - 1969) |
புரட்சிகர நடவடிக்கைகள்
தொகுரிப்பன் கல்லூரியில் இந்தியாவின் முதல் மாணவர் சங்க தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்கா அனுசீலன் சமித்தியின் பாரிசல் கிளையின் தலைவராக இருந்தார். 1929 ஆம் ஆண்டு, நவ வன்முறைக் கூட்டமைப்பை உருவாக்க வழிவகுத்த தலைவர்களில் இவரும் ஒருவர்.
1930 ஆம் ஆண்டு, மெச்சுபசார் வெடிகுண்டு வழக்கு தொடர்பாக, 23 பேருடன் கைது செய்யப்பட்டார். 1932 ஆம் ஆண்டில், அவர் மற்ற புரட்சியாளர்களுடன் அந்தமான் செல்லுலார் சிறைக்கு அனுப்பப்பட்டார். பொதுவுடைமை கருத்துக்களுடன் பழகினார்.[1]
பின்னர் அவர் மார்க்சிசுட் ஆனார். 1938 ஆம் ஆண்டு இந்திய பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். இந்திய பொதுவுடைமைக் கட்சி பொலிட்பீரோவால் அமைக்கப்பட்ட உள் குழுவின் ஏழு உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[2] இந்த பொதுவுடைமை கட்சியின் உள்கட்சிப் போராட்டத்தின்போதும் அவருக்கு முக்கியப் பங்குண்டு. அவர் 1957 ஆம் ஆண்டு தேர்தலில் பிசப்பூரில் இருந்து மேற்கு வங்காளத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இந்திய பொதுவுடைமை கட்சியில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு, நிரஞ்சன் இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்) உடன் இருந்தார். அவர் 1967 - 1968 மற்றும் 1969 ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்கத்தின் கூட்டணி அமைச்சராகவும் இருந்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sengupta, Subodhchandra, ed. (1976). Samsad Bengali Charitabidhan (Vol. 1). Kolkata: Sishu Sahitya Samsad. p. 362. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7955-292-6.Sengupta, Subodhchandra; Basu, Anjali, eds. (1976). Samsad Bengali Charitabidhan (Vol. 1). Kolkata: Sishu Sahitya Samsad. p. 362. சிறப்பு:புத்தக ஆதாரங்கள்/978-81-7955-292-6.
- ↑ Jyoti Basu. "Memories: The Ones That Have Lasted, Part XI: I am Arrested". Ganashakti. Archived from the original on 22 February 2001.
- ↑ "Assembly Election Results of Bijpur Assembly Seat". பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
- ↑ Samsad Bengali Charitabidhan (Vol. 1).Sengupta, Subodhchandra; Basu, Anjali, eds. (1976). Samsad Bengali Charitabidhan (Vol. 1). Kolkata: Sishu Sahitya Samsad. p. 362. ISBN சிறப்பு:புத்தக ஆதாரங்கள்/978-81-7955-292-6.