நிர்மலா கோவிந்தராசன்

நிர்மலா கோவிந்தராசன் (Nirmala Govindarajan) என்பவர் இந்திய நாவலாசிரியர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். இவரது நாவலான தபூ (2019) இரவீந்திரநாத் தாகூர் இலக்கியப் பரிசுக்காகப் பட்டியலிடப்பட்டது. 2020-ல் அட்டா கலாட்டா பெங்களூர் இலக்கிய விழா புத்தகப் பரிசுக்காக நீண்ட பட்டியலிடப்பட்டது.

நிர்மலா கோவிந்தராசன்
நிர்மலா கோவிந்தராசன்
நிர்மலா கோவிந்தராசன்
தொழில்நாவலாசிரியர், இதழியலாளர்
மொழிஆங்கிலம்
தேசியம்இந்தியர்
இணையதளம்
அதிகாரப்பூர்வ இணையதளம்

வாழ்க்கை

தொகு

பெங்களூருவைப் பிறப்பிடமாகக் கொண்ட நிர்மலா கோவிந்தராசன் தனது கல்லூரிக் கல்வியின் போது எழுதத் தொடங்கினார். பின்னர் பத்திரிகையாளராகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] இவர் தற்போது சமூகத் துறை ஆவணப்படமாக்கலில் பணியாற்றி வருகிறார். 2014-ல், நிர்மலா முதல் டைம்ஸ் இலக்கியத் திருவிழாவினை பெங்களூரில் இணைந்து நடத்தினார். மேலும் 2016-இல், பெங்களூரில் உள்ள பிரித்தானியக் குழும இலக்கிய எழுத்தறிவு தொடரை அறிமுகப்படுத்தினார்.

வெளியீடு

தொகு

கோவிந்தராசனின் படைப்புகள் பெரும்பாலும் ஆட்கடத்தல், சுரண்டல் மற்றும் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைகளைக் கையாளுகின்றன. மேலும் உருவகங்கள் மற்றும் உணர்வு நுட்பத்தைப் பயன்படுத்துகின்றார்.[1] இவரது படைப்புகள் பாடல் உரைநடையில் எழுதப்பட்டுள்ளன.[2] இவர் தனது முதல் நாவலான கம்மீனீயூட்டி கேட்டலிசுட்டு (Community Catalyst) 2016-ல் வெளியிட்டார். கர்நாடகாவின் உயர்கல்வித் துறையின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் பாரத் லால் மீனாவின் நிஜ வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் இது எழுதப்பட்டுள்ளது.[3][4][5]

இவரது கங்கர்சு டாட்டர்சு (Hunger's Daughters) (2018) நாவல், இந்தியாவின் கிராமப்புற மையப்பகுதியில் இவரது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. நாவல் பாதிக்கப்படக்கூடிய வாழ்க்கையைக் கவிதையாகச் சித்தரிக்கிறது. நாவல் சுதந்திரம், அடையாளம் மற்றும் சுதந்திரத்தின் கதையைச் சொல்கிறது. இதன் கதாநாயகர்கள் ஒடிசா, சார்க்கண்டு மற்றும் கருநாடகாவின் வரைபடத்தில் தெரியாத வன குக்கிராமங்களைச் சேர்ந்த சிறுமிகள் ஆவர். இது ஒடிசாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் வசிக்கும் சுசாந்தி போத்ரா என்ற சிறுமியைப் பற்றிப் பேசுகிறது. இவளுடைய தந்தை இறந்துவிட்டதாகக் கருதப்படுவதாலும், இவளுடைய தாய் காணாமல் போனதாலும் இவள் மிக இளம் வயதிலேயே சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். மற்றொரு பெண், 8 வயது நெல்லி, தன் எசமானியின் வீட்டிலிருந்து ஓடி, கடத்தப்பட்டு நாக்பூரில் உள்ள ஒரு விபச்சார விடுதியில் விற்கப்படுகிறாள். இரண்டு தசாப்தங்களாக, இவரது தாயார் கவுரவ்வா, கிதாபூர் குக்கிராமத்தில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்புவதற்காகக் காத்திருந்தார்.[6][7]

இவரது நாவலான தாபோ (Taboo)(2019), கடத்தப்படும் வயது குறைந்த பெண்களைப் பற்றியது. இது பெண் சக்தி மற்றும் அடையாளத்தைப் பற்றிப் பேசுகிறது. கதையானது மெல்லிய கைகள் கொண்ட பெண்ணைச் சுற்றிச் சுழல்கிறது. இவர் மக்கள், சட்டவிரோத வர்த்தகங்கள் மற்றும் பிராந்தியங்களைக் கடந்து தான் யார் என்பதைத் தெரிந்துகொள்ள, இறுதியில் தான் யாராக இருக்க விரும்புகிறாள் என்ற சுதந்திரத்தைப் பெற முடியும். இசுபெயினிலிருந்து இலங்கை மற்றும் தமிழ்நாடு வரை தென்கிழக்கு ஆசியாவில் தாபோ நடைபெறுகிறது. இது பாலியல் வர்த்தகத்தில் பெண்களின் உளவியல் மற்றும் உடலியல் அம்சங்களை ஆராய்கிறது. இது மனித கடத்தல் மற்றும் குழந்தை விபச்சாரத்தின் கருப்பொருளைச் சித்தரிக்கிறது. இந்த நாவல் ஒரு குடியரசுச் சமூகம் மற்றும் அதன் அரசியல் மற்றும் இந்த நடைமுறைகளை நிறுத்துவதற்கான அவர்களின் நோக்கம் பற்றிப் பல கேள்விகளை முன்வைக்கிறது.[8][9][10][11][12]

கோவிந்தராசன் இரண்டு புத்தகங்களை இணைந்து எழுதியுள்ளார்: மைண்ட் பிளாக்ஸ் 1.0 மற்றும் டிரெயில்பிளேசர்ஸ் ஆப் பெங்களூர்.[4] தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி ஹிந்து, டெக்கான் ஹெரால்டு, இந்தியா டுடே மற்றும் தி சண்டே கார்டியன் ஆகியவற்றில் இவர் எழுதியுள்ளார்.

மரியாதை

தொகு

கோவிந்தராசனின் நாவலான தாபோ (2019) இரவீந்திரநாத் தாகூர் இலக்கியப் பரிசுக்கான பட்டியலிடப்பட்டது. 2020-ல் அட்டா கலாட்டா பெங்களூர் இலக்கிய விழா புத்தகப் பரிசுக்காகப் பட்டியலிடப்பட்டது.[13][14] ஜே. கே பேப்பர் ஆதர் விருதுகளின் புனைகதை வகையிலும் இந்த நாவல் நீண்ட பட்டியலிடப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Dhanaraj, Ruth (24 January 2020). "Author Nirmala Govindarajan talks about her latest book, style of writing and what inspires her". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 1 February 2021.Dhanaraj, Ruth (24 January 2020). "Author Nirmala Govindarajan talks about her latest book, style of writing and what inspires her". The Hindu. Retrieved 1 February 2021.
  2. Mitra, Ipshita (15 March 2020). "Marquez's Eréndira Inspired This Author to Write About the Identity of a Sex Worker". The Wire. பார்க்கப்பட்ட நாள் 1 February 2021.
  3. Dakshina, Yogita (3 December 2016). "Book Review: What it takes to be a part of a people's movement". The Sunday Guardian Live. பார்க்கப்பட்ட நாள் 1 February 2021.
  4. 4.0 4.1 "Looking at life through the eyes of a bureaucrat". Deccan Chronicle. 2016-10-24. பார்க்கப்பட்ட நாள் 1 February 2021."Looking at life through the eyes of a bureaucrat". Deccan Chronicle. 2016-10-24. Retrieved 1 February 2021.
  5. Roy, Supriya (11 July 2017). "The Community Catalyst Speaks". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 1 February 2021.
  6. Datta, Sravasti (24 January 2019). "Activist fiction". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 1 February 2021.
  7. "Hunger's Daughters by Nirmala Govindarajan – Review". Free Press Journal. 13 April 2019. பார்க்கப்பட்ட நாள் 1 February 2021.
  8. "Nirmala Govindarajan's 'Taboo' documents stories of girls pushed into sex trade". Deccan Herald. 12 March 2020. பார்க்கப்பட்ட நாள் 1 February 2021.
  9. "Love in the time of identity politics". The Sunday Guardian Live. 7 November 2020. பார்க்கப்பட்ட நாள் 1 February 2021.
  10. "Die Sprache der Leere". F.A.Z. (in ஜெர்மன்). 8 June 2020. Archived from the original on 9 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 1 February 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. Munir, Rehana (17 November 2019). "Books of the week: From Love, Loss, and Longing in Kashmir to the India story of the Panama Papers, our picks". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 1 February 2021.
  12. Saujata, Tushar (1 August 2020). "Taboo By Nirmala Govindarajan - A Journey into The Soul Of Its Characters". Explocity Bangalore. பார்க்கப்பட்ட நாள் 1 February 2021.
  13. "Rabindranath Tagore Literary Prize shortlist announced". The Indian Express. 27 November 2020. பார்க்கப்பட்ட நாள் 1 February 2021.
  14. "Atta Galatta–Bangalore Literature Festival Book Prize longlist announced". The Indian Express. 15 October 2020. பார்க்கப்பட்ட நாள் 1 February 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மலா_கோவிந்தராசன்&oldid=4110273" இலிருந்து மீள்விக்கப்பட்டது