நிர்மலா பட்வர்தன்
நிர்மலா பட்வர்தன் (Nirmala Patwardhan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பீங்கான் கலைஞராவார். 1928 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இவர் வாழ்ந்தார், சிந்து மாகாணம் ஐதராபாத்தில் பிறந்த இவர், சப்பானில் வளர்ந்து, சாந்திநிகேதனில் நந்தலால் போசின் கீழ் கலைப் பாடம் பயின்றார், ஐக்கிய இராச்சியத்தின் பெர்னார்டு இலீச்சு, செருமனியின் இசுடுட்கார்ட் நகரத்தில் உல்ரிச் குந்தர், ரே பிஞ்ச் ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார். குயவர்களுக்கான கையேடு , இரண்டாம் பதிப்பாக குயவர்களுக்கான புதிய கையேடு மற்றும் 11 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சீன நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட "நிர்மலா சுன் கிளேசு" எனப்படும் படிந்து உறைந்ததை மீண்டும் கண்டுபிடித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய நூல்கள் இவரது முக்கிய படைப்புகளில் அடங்கும். [1] [2] [3]
நிர்மலா பட்வர்தன் Nirmala Patwardhan | |
---|---|
பிறப்பு | 1928 ஐதராபாத்து, சிந்து |
இறப்பு | 2008 (அகவை 79–80) |
அறியப்படுவது | சுட்டாங்கல் (பீங்கான்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ Patwardhan, Nirmala (2005) New Handbook for Potters. Allied Publishers.
- ↑ Subrahmanian, Madhvi (2000) The new face of the potter.[தொடர்பிழந்த இணைப்பு] The Hindu 19 January 2000
- ↑ India Today. December 15, 1979