நிர்மலா வாத்வானி
நிர்மலா வாத்வானி (Nirmala Wadhwani) குசராத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் விஜய் ரூபானி அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக இருந்தார். இவர் குஜராத் சட்டப்பேரவையில் நரோதா சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2012 முதல் 2017 வரை பதவியிலிருந்தார்.
நிர்மலா வாத்வானி | |
---|---|
குசராத்து சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2012–2017 | |
முன்னையவர் | மாயா கொட்னானி |
பின்னவர் | பல்ராம் தாவனி |
தொகுதி | நரோதா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1964 (அகவை 59–60) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழ்க்கை வரலாறு
தொகுவாத்வானி சிந்தி பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். இவர் முன்பு மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவராக இருந்தார். குரோஷியாவில் இருந்து சோனோகிராபியில் பட்டயப்படிப்பினை முடித்த இவர், அகமதாபாத் மருத்துவச் சங்கத்தின் பெண்கள் பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) உறுப்பினர் ஆவார். குசராத்தில் பாஜகவின் செயற்குழுவில் உறுப்பினராக உள்ளார். குசராத் சட்டமன்ற உறுப்பினராக, இவர் ஐ. சி. டி. எஸ், பிசி-பிஎன்டிடி, ஷாலா ஆரோக்யா சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்புகள் உள்ளிட்ட குழுக்களில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.[1] இவர் 2012 குசராத்து சட்டப்பேரவைத் தேர்தலில் நரோடா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி போட்டியிட்டுப் பெற்றார். ஆகத்து 2016-இல், குசராத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்ட நிர்மலா, முதலமைச்சர் விஜய் ரூபானி அமைச்சரவையில் பதவிவகித்த ஒரே பெண் உறுப்பினர் ஆவார்.
பிப்ரவரி 2017 குசராத்து சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில், விவசாயி தற்கொலை குறித்த விவாதம் கைகலப்பாக மாறியது. வாத்வானி காயமடைந்தார். இந்தியத் தேசியக் காங்கிரசின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் தனது கையில் காயம் ஏற்படுத்தியதாக இவர் குற்றம் சாட்டினார்.[2] 2017 குசராத்து சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இவருக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Smt. (Dr.) Nirmla Sunil Wadhwani" (PDF). Gujarat Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
- ↑ . 23 February 2017.
- ↑ .