நிர்லெப் கவுர்
நிர்லெப் கவுர் (1927-1987) இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 4வது மக்களவையில் சங்ரூரை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகவுர் பாட்டியாலாவில் ஆகத்து 11, 1927-ல் அரச குடும்பத்தில் பிறந்த நிர்லெப் கவுர், சர்தார் கியான் சிங் ராரேவாலாவின் மகள் ஆவார். ராரேவாலா பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் மாநிலங்களின் முதல் முதலமைச்சர் ஆவார்.[1][2] கவுர் தனது பள்ளிப் படிப்பை லாகூரில் உள்ள திரு இருதய பள்ளியில் பயின்றார்.[1]
பணி
தொகுகவுர் 1967 இந்தியப் பொதுத் தேர்தலில் 4வது மக்களவைக்கு அகாலி தளம் - சாந்த் ஃபதே சிங் இடத்தில் போட்டியிட்டார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளரை 98,212 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3] இவரும், பாட்டியாலாவைச் சேர்ந்த ராஜ்மாதா மொஹிந்தர் கவுரும், மறுசீரமைக்கப்பட்ட பஞ்சாபிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் இரண்டு பெண்கள் ஆவர்.[4] இவர் முன்பு சுதந்திராக் கட்சியின் செயலாளராகவும், பாட்டியாலாவில் உள்ள மாதா சாஹிப் கவுர் கல்வி நிலையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.[1]
சிரோமணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தாலும் இத்தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண், கவுர் ஆவார்.[5] 1980 பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில், இவர் பயல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளர் பியாந்த் சிங்கிடம் 2,936 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[6]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுமார்ச் 14, 1942-ல், இவர் சர்தார் ராஜ்தேவ் சிங்கை மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.[1] சண்டிகர் நகரில் இவரது வீடு நீச்சல் குளத்துடன் கட்டப்பட்ட முதல் வீடாகும்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Members Bioprofile: Sardarni, Nirlep Kaur". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
- ↑ Bains, Tara Singh; Johnston, Hugh J. M. (1995). The Four Quarters of the Night: The Life-journey of an Emigrant Sikh. McGill-Queen's Press - MQUP. p. 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7735-1265-8.
- ↑ "Statistical Report on General Elections, 1967 to the Fourth Lok Sabha" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். p. 327. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
- ↑ "Patiala royals reign supreme in politics too". https://timesofindia.indiatimes.com/news/Patiala-royals-reign-supreme-in-politics-too/articleshow/31977966.cms. பார்த்த நாள்: 28 November 2017.
- ↑ Punjab 2000: Political and Socio-economic Developments. Anamika Publishers & Distributors. p. 180.
- ↑ "Statistical Report on General Election, 1980 to the Legislative Assembly of Punjab" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். p. 74. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
- ↑ "Pool proof". The Tribune. 14 June 2009. http://www.tribuneindia.com/2009/20090614/ttlife.htm. பார்த்த நாள்: 28 November 2017.