நிர்வாகத் தயாரிப்பாளர்

நிர்வாகத் தயாரிப்பாளர் (Executive producer) என்பது ஒரு வணிக பொழுதுபோக்கு உட்பத்தி தயாரிப்பதில் உயர் பதவியில் வகிக்கும் நபர் ஆகும்.[1] இவரின் பணி நிர்வாகக் கணக்குகளை மேர்பார்பை இடலாம் அல்லது சட்ட சிக்கல்கள் (பதிப்புரிமை) போன்றவற்றை கையாளலாம்.[2][3] இவர்கள் திரைப்படத்துறை, தொலைக்காட்சித்துறை, இசைத்துறை மற்றும் நிகழ்ப்படத்துறை போன்றவற்றில் பணி புரிகிறார்கள்.

திரைப்படம்தொகு

நிர்வாக தயாரிப்பாளர்கள் ஈடுபாடு, பொறுப்பு மற்றும் ஆளுமை ஆகியவற்றில் வேறுபடுகிறார்கள். சில நிர்வாக தயாரிப்பாளர்கள் உற்பத்தியின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர், சிலர் ஒரு திட்டத்தின் தயாரிப்பாளர்களை மட்டும் மேற்பார்வையிடுகிறார்கள், சிலர் பெயரில் மட்டுமே ஈடுபடுகிறார்கள்.[4]

திரையுலகில் நிர்வாக தயாரிப்பாளர்களின் வரவு காலப்போக்கில் உயர்ந்துள்ளது. 1990 ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து பிற்பகுதிவரை ஒரு படத்திற்கு சராசரியாக இரண்டு நிர்வாக தயாரிப்பாளர்கள் இருந்தனர். 2000 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2.5 ஆக உயர்ந்தது இது சராசரியான திரைப்பட தயாரிப்பாளரின் எண்ணிக்கையை விட அதிகமாக. 2013 ஆம் ஆண்டில் 3.2 தயாரிப்பாளர்களுடன் ஒப்பிடும்போது, 2016 ஆம் ஆண்டில் ஒரு படத்திற்கு சராசரியாக 4.4 நிர்வாக தயாரிப்பாளர்கள் இருந்தனர்.[5]

தொலைக்காட்சிதொகு

தொலைக்காட்சித் துறையில் ஒரு நிர்வாக தயாரிப்பாளர் பொதுவாக படைப்பு உள்ளடக்கம் மற்றும் ஒரு உற்பத்தியின் நிதி அம்சங்களை மேற்பார்வையிடுகிறார்.

மேற்கோள்கள்தொகு

  1. "Typically an executive producer may handle business and legal issues". IMDB. 4 March 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "What is an Executive Producer?". WiseGEEK. 7 ஜூலை 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 January 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Executive Producer". CareersinFilm.com. 16 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. "The Program Doctor".
  5. "How many movie producers does a film need?". 4 May 2016 அன்று பார்க்கப்பட்டது.