நிறைவி வரிசை
நிறைரி வரிசை (terminator sequence) அல்லது வரிசைகள் என்பது ஆர்.என்.ஏ நகலாக்கத்தின் (RNA transcription) முழுமையாதால் நிலையில் (termination phase) வரும் ஒரு வரிசை ஆகும். ஒரு மரபணு தனக்கான புரத கோடுகளை வெளிப்படுத்த, டி.என்.ஏ. வில் இருந்து ஆர்.என்.ஏ வாக மாற்றப்படும் நிகழ்வுக்கு ஆர்.என்.ஏ நகலாக்கம் எனப்படும். இப்பண்பு மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடுல் வரும் இன்றியமையாத ஒரு பிரிவு ஆகும். ஆர்.என்.ஏ நகலாக்கத்தின் போது மூன்று நிலைகள் உள்ளன. அவைகள்
- ௧. தொடக்க நிலை (initiation phase)
- ௨. விரிவடைதல் நிலை (elongation)
- ௩. முழுமையாதல் நிலை.(termination)
ஒவ்வொரு நிலைகளிலும் பல தொடரூக்கிகள் (promoter binding factors), செயலூக்கிகள் (transcription factors), தொடக்க கரணிகள் மற்றும் விரிவு கரணிகள் என பல மரபணுக்கள் பங்கேற்கின்றன. இதில் முழுமையாதல் நிலையில் ஆர்.என்.ஏ நகலாக்கத்தை நிறைவடைய பயன்படும் வரிசைகளே நிறைரி வரிசை எனப்படும். செயற்கையாக பக்டிரியல் படிவாக்கம் செய்யப்படும் பரப்பிகளில் நோசு (NOS) (பயிரில் மட்டும் ) எனப்படும் மரபணுவின் வரிசைகள் நிறைரியாக பாவிக்கப்படுகின்றன. ஆர்.என்.ஏ நகலாக்கத்தை நிறைவடைய இவ்வரிசைகள் பயன்படுகின்றன. இந்நிகழ்வு இரு வழிகளில் நடைபெறலாம். இதற்கு ரோ (ஆர்.என்.ஏ எளிகேசு புரதம், Rho-RNA Helicase protein) எனப்படும் மரபணு பயன்படுவதால் , அதனை பொருத்து
- ரோ சார்ந்த முழுமையாதால்
- ரோ சாரா முழுமையாதால்
மேலும் இப்புரதம் கோலுயுயிரில் (E.coli) மட்டும் ஈடுபடுகின்றன.
ரோ சாரா முழுமையாதாலில் ஈடுபடும் வரிசைகள் அடினைன் மற்றும் யுரசில் துகள்கள் மிகுதியாக இருக்கும். இதனால் ஆர்.என்.ஏ தனது முடிவடையும் எல்லையில் வரும் போது, ஆர்.என்.ஏ க்கள் எளிதாக வெளியில் இழுத்து வரப்படும். ஏனெனில் அடினைன் மற்றும் யுரசில் துகள்களுக்கு இடையே இரு பிணைவுகள் உள்ளதால் இழுத்து வரப்படும் நிகழ்வு எளிதாகிறது. மாறாக சைட்டோசைனின் மற்றும் குவானின் இடையே மூன்று பிணைப்புகள் உள்ளதால் இந்நிகழ்வு நடைபெறுவது கடினமே.