நிலநடுக்க மையம்
நிலநடுக்க மையம் (epicenter, epicentre or epicentrum)/ˈɛpɪsɛntər/[1] என்பது பூமியின் அடியில் நிலநடுக்கம் உருவாகக்கூடிய புள்ளியான குவியப்புள்ளிக்கு நேர் மேலாக பூமியின் மேற்பரப்பில் உள்ள மையப்பகுதியாகும், இந்த வார்த்தையானது புதிய இலத்தீன் பெயர்ச்சொல்லான எபிசென்ட்ரம் (epicentrum) என்பதிலிருந்து பெறப்பட்ட வார்த்தையாகும். இந்த எபிசென்ட்ரம் என்ற வார்த்தை ஐரிசு நாட்டின் நிலநடுக்கவியல் ஆய்வாளர் இராபர்ட் மேலட் என்பவரால் உருவாக்கப்பட்டது.[2][3]
நிலநடுக்கவியலில் பயன்பாடு
தொகுநில நடுக்கவியலில், நில நடுக்க மையம் எனப்படுவது புவியின் ஆழத்தில் நில நடுக்கம் தொடங்கக் கூடிய நிலவியல் அடுக்கில் வெடிப்பு ஏற்படக்கூடிய குவியப் புள்ளிக்கு நேர் மேலாக புவியின் மேற்பரப்பில் உள்ள பகுதியாகும். பெரும்பாலான நேர்வுகளில் இந்தப் புள்ளியில் காணப்படும் பகுதியே மிகுந்த சேதத்திற்கு உள்ளாகும் பகுதியாகும். இருப்பினும், பெரிய நிகழ்வுகளில், நில வெடிப்பு நிகழும் இடமானது நீளமாகக் காணப்பட்டால், சேதமானது வெடிப்பின் நீளம் முழுவதும் பரவிக்காணப்படும். உதாரணமாக, அலாஸ்காவில் 2002 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 7.9 அளவிலான எண் மதிப்பைக் கொண்ட நில நடுக்கமானது நில நடுக்க மையமானது வெடிப்பின் மேற்கு முனையாக இருந்தது. ஆனால், பெருமளவு சேதமானது வெடிப்பின் கிழக்கு முனையிலிருந்து 330 கிமீ தொலைவு வரையே இருந்தது.[4]
நிலநடுக்க மையத் தொலைவு
தொகுநில நடுக்கத்தின் போது நில அதிர்வு அலைகள் நில வெடிப்பு மையத்திலிருந்து கோள வடிவில் அலை இயக்கம் போல பரவுகின்றன. புவியின் ஆழத்தில் திரவ அடுக்கின் வெளிப்புற மையம் நெட்டலைகள் அல்லது அமுக்கப்பட்ட (P-அலைகளை) விலகலடையவும், குறுக்கலைகளை (S- அலைகள்) உட்கவர்ந்து கொள்ளவும் செய்கின்றது இதன் காரணத்தால், நில அதிர்ச்சி மையத்திலிருந்து பூமியின் எதிர் பக்கத்தில் நிலநடுக்க மறைவுப் பகுதி ஏற்படுகிறது. நில அதிர்வு நிழல் மண்டலத்திற்கு வெளியே இரண்டு வகை அலைகளையும் கண்டறிய முடியும், ஆனால், அவை வேறுபட்ட வேகம் மற்றும் புவி வழிப்பாதைகள் காரணமாக, அவை வெவ்வேறு நேரங்களில் புவியின் மேற்பரப்பை வந்தடையும். P-அலை மற்றும் S- அலை ஒரே பிரிவினைக் கொண்டிருக்கும் ஒரு பயண நேர வரைபடத்தின் எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் நிலநடுக்கமானி நேரத்தின் வேறுபாட்டை அளவிடுவதன் மூலம் புவியியலாளர்களால் நில நடுக்க மையத்திற்கான தொலைவைக் கணக்கிட முடியும். இந்த தூரமே நில நடுக்க மையத் தொலைவு என அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்தத் தொலைவானது கோணத்தால் அளவிடப்படுகிறது. நில நடுக்க இயலைப் பொறுத்தவரை கோணம் அல்லது பாகை என்பதற்குப் பதிலாக Δ (டெல்டா) எனக் குறிப்பிடப்படுகிறது.
குறைந்தபட்சம் மூன்று நில நடுக்கவியல் அளவிடக்கூடிய நிலையங்களில் இருந்து நில நடுக்க மையத் தொலைவுகள் கணக்கிடப்பட்டதும், மூவச்சாக்கத்தைப் பயன்படுத்தி நில நடுக்க மையத்தின் இருப்பிடத்தைக் கண்டறிவது எளிமையானதாகிறது.
ரிக்டர் மற்றும் குடன்பெர்க் ஆகியோரால் உருவாக்கப்பட்ட நில அதிர்வு அளவுகளை கணக்கிடுவதற்கு நில நடுக்க மையத் தொலைவும் கூட பயன்படுத்தப்படுகிறது.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Oxford English Dictionary: "The point over the centre: applied in Seismol. to the outbreaking point of earthquake shocks."
- ↑ Filiatrault, A. (2002). Elements of Earthquake Engineering and Structural Dynamics (2 ed.). Presses inter Polytechnique. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-553-01021-7. பார்க்கப்பட்ட நாள் 5 July 2014.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|accessdate=
and|access-date=
specified (help) - ↑ "epicenter". Merriam -Webster.
- ↑ Fuis, Gary. "Rupture in South-Central Alaska—The Denali Fault Earthquake of 2002". USGS. பார்க்கப்பட்ட நாள் 2008-04-20.
- ↑ Tyler M. Schau (1991). The Richter Scale (ML). USGS. http://www.johnmartin.com/earthquakes/eqsafs/safs_693.htm. பார்த்த நாள்: 2008-09-14.
- ↑ William L. Ellsworth (1991). SURFACE-WAVE MAGNITUDE (Ms) AND BODY-WAVE MAGNITUDE (mb). USGS. http://www.johnmartin.com/earthquakes/eqsafs/safs_694.htm. பார்த்த நாள்: 2008-09-14.