நிலம்பூர் ஆயிசா

இந்திய நடிகை

நிலம்பூர் ஆயிசா (Nilambur Ayisha) என்பவர் மலையாளத் திரைப்படத்துறையிலும் மலையாள நாடகத் துறையிலும் பணிபுரியும் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் ஒரு நாடகக் கலைஞராகத் தனது கலை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1960களின் பிற்பகுதியிலும் 1970களிலும் மலையாளத் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தார். இவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்த முதல் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண் இவர்.[2]

நீலம்பூர் ஆயிசா
பிறப்புநிலம்பூர்,
(மலப்புரம் மாவட்டம்]], கேரளம், இந்தியா)
தேசியம்இந்தியர்
பணிநடிகை, நாடக நடிகை[1]
செயற்பாட்டுக்
காலம்
1961–முதல்
பிள்ளைகள்1

மஞ்சு வாரியர் இவரது வாழ்க்கையைப் பற்றிய 2023 மலையாள மொழி வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ஆயிஷாவில் நீலம்பூர் ஆயிசாவாக நடித்தார்.[3] அமீர் பள்ளிக்கல் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஜகாரியா முகமது தயாரித்துள்ளார்.

இளமை

தொகு

ஆயிசா சென்னை மாகாணத்தில் ஆளுகையிலிருந்த நிலம்பூரில் பிறந்தார். பணக்கார குடும்பத்தில் பிறந்த இவர் கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தார். தனது 13 வயதில், 47 வயது முதியவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஐந்தாவது நாளில் இவரது திருமண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு அப்போதிருந்து தனிமையில் வாழ்ந்தார்.

நடிகராக

தொகு

ஆயிசா 1950களில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 1953ஆம் ஆண்டில் தனது 16 வயதில் நாடக ஆசிரியர் ஈ. கே. அயாமுவின் இஜ்ஜு நல்லோர் மன்சனகன் நோக்கு (1953) மூலம் அறிமுகமானார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2,500க்கும் மேற்பட்ட அரங்குகளில் நாடக நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பின்னர் இவர் கே. டி. முகம்மது, வைக்கம் முகம்மது பஷீர், கான் கவில் மற்றும் பி. ஜே. ஆண்டனி போன்ற பிரபலக் கலைஞர்களுடன் நாடகங்களில் பணியாற்றினார். கே. டி. முகமது எழுதி இயக்கிய இது பூமியானு, தீக்கனல், சிருஷ்டி மற்றும் காஃபிர் போன்ற நாடகங்களில் கதாநாயகியாக நடித்தார்.

1961ஆம் ஆண்டு இராஜேந்திரன் இயக்கிய எலிபண்ட் குயின் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் இவர் திரைத்துறையில் நுழைந்தார். மற்ற நடிகர்களில் ஹெலன் மற்றும் ஆசாத் ஆகியோர் அடங்குவர். வேட்டையாடும் குடும்பத்தின் ஒரு பெண்ணாக நடித்தார். தனது சொந்த ஊரில் படமாக்கப்பட்டதால் இவருக்குப் படத்தில் அறிமுகம் கிடைத்தது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் மலையாளத்தில் தனது முதல் படமான கண்டம் பெச்சா கோட்டிலும் நடித்தார். இதைத் தொடர்ந்து சுபைதா, குட்டிக்குப்பம், ஒலவம் தீரவம், குப்பிவாள போன்ற இவர் நடித்த படங்கள் வெளிவந்தன.

விருதுகள்

தொகு

2002ஆம் ஆண்டில், ஆயிஷா தி கேரளச் சங்கீத நாடக அகாதமி விருதினைத் தனது நாடகப் பங்களிப்பிற்காகப் பெற்றார்.[4] நாடகத்திற்கான இவரது ஒட்டுமொத்தப் பங்களிப்புக்காக எஸ். எல். புரம் மாநில பரிசினையும் பெற்றுள்ளார். இவர் கேரள மாநில திரைப்பட விருதினை இரண்டாவது சிறந்த நடிகைக்காக ஓமக்குயில் பாடும்போல் திரைப்படத்திற்காக 2011இல் பெற்றார். 2011ஆம் ஆண்டில் பிரேம்ஜி விருதினைப் பெற்றார். 

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Nilambur Ayesha". BFI (in ஆங்கிலம்). Archived from the original on 5 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-02-01.
  2. "Nilambur Ayisha: India actor who survived religious hate and bullets" (in en-GB). BBC News. 2022-06-03. https://www.bbc.com/news/world-asia-india-61679980. 
  3. "Manju Warrier's film is a feel-good narrative woven out of Nilambur Ayisha's life". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.
  4. "Kerala Sangeetha Nataka Akademi Award: Drama". Department of Cultural Affairs, Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 26 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலம்பூர்_ஆயிசா&oldid=4115266" இலிருந்து மீள்விக்கப்பட்டது