நிலவியல் அருங்காட்சியகம் (மலேசியா)

நிலவியல் அருங்காட்சியகம் (Geological Museum, மலாய்: Muzium Geologi) மலேசியாவில் பேராக் மாநிலத்தில் ஈப்போ நகரில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும்.

நிலவியல் அருங்காட்சியகம்
Geological Museum
Muzium Geologi
Map
நிறுவப்பட்டது1957
அமைவிடம்ஈப்போ, பேராக், மலேசியா
ஆள்கூற்று4°35′48.5″N 101°07′11.5″E / 4.596806°N 101.119861°E / 4.596806; 101.119861
வகைஅருங்காட்சியகம்
உரிமையாளர்கனிமங்கள் மற்றும் புவியறிவியல் துறை, மலேசியா

வரலாறு

தொகு

1955 சூலை மாதத்தில், பேராக்கு முடிக்குரிய இளவரசர் மூன்றாம் இத்ரிசு ஷா என்பரால் அமைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் 1957 ஆம் ஆண்டில் கட்டி முடித்து திறக்கப்பட்டது.[1] கண்காட்சி இடம் மற்றும் வசூலை அதிகரிப்பதற்கு இந்த அருங்காட்சியகம் மலேசியாவின் ஒன்பதாவது மலேசிய திட்டத்தின் கீழ் விரிவாக புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. இந்த அருங்காட்சியகம் 343 மீ2 பரப்பளவில் உள்ளது. இந்த கட்டிடம் ஈப்போவின் கனிம மற்றும் புவி அறிவியல் துறையுடன் ஒரு ஒருங்கிணைந்த பகுதி.

பொருட்காட்சிகள்

தொகு

இந்த அருங்காட்சியகம், அருங்காட்சியகத்தின் வரலாறு, பூமியின் வரலாறு, தொன்மாக்கள், தாதுக்கள், சுரங்க நடவடிக்கைகள், கனிம ஆய்வு, புவியியல் அபாயங்கள் என ஏழு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு 600 க்கும் மேற்பட்ட வகையான கனிமங்கள் மற்றும் பல்வேறு கற்கள் வைக்கப்பட்டுள்ளன.[2]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Geological Museum". Ipoh Tourism Board Official Website. பார்க்கப்பட்ட நாள் 18 November 2021.
  2. Leong, Ewe Paik (16 February 2017). "10 tourist attractions in the Kinta Valley". New Straits Times. https://www.nst.com.my/news/2017/02/212978/10-tourist-attractions-kinta-valley.