நிலவு மறைப்பு, 27 சூலை 2018
நிலவு மறைப்பு 27, சூலை 2018 | |
---|---|
முழுமையான நிலவு மறைப்பு, இடம்: உரியா, இத்தாலி நிலவு புவியின் நிழலின் மையத்தினூடாக நகர்தல் | |
சாரோஸ் சுழற்சி | 129 (38 of 71) |
காமா | +0.1168 |
நீடிக்கும் காலம் (hr:mn:sc) | |
முழுமை | 1:42:57 |
பகுதி | 3:54:32 |
கருநிழல் | 6:13:48 |
Contacts (UTC) | |
P1 | 17:14:49 |
U1 | 18:24:27 |
U2 | 19:30:15 |
Greatest | 20:21:44 |
U3 | 21:13:12 |
U4 | 22:19:00 |
P4 | 23:28:37 |
ஒரு முழுமையான நிலவு மறைப்பு 27 சூலை 2018 அன்று நிகழ்ந்தது. அப்போது நிலவு புவியின் நிழலின் மையக் கோடு வழியே நகர்ந்து சென்றது. எனவே இது 2011 சூன் நிலவு மறைப்புக்குப் பின் நிகழும் முதலாவது மைய நிலவு மறைப்பு ஆகும். மேலும் இது 2018ம் ஆண்டு நிகழ்ந்த இரண்டாவது நிலவு மறைப்பு ஆகும்.
இந்நிகழ்வின் போது நிலவு புவிக்கு மிக தொலைவில் இருந்ததால் இது நீண்ட நேரம் நீடித்தது. எனவே இது 21ஆம் நூற்றாண்டின் மிக நீளமான நிலவு மறைப்பாக இருந்தது.[1] இது தோராயமாக 1 மணி 47 நிமிடங்கள் வரை நீடித்தது.[2]
தோற்றத்தன்மை
தொகுகிழக்கு ஆபிரிக்கா, மத்திய ஆசியாவில் முழுமையாகத் தோற்றும். கிழக்கு அமெரிக்கா, மேற்கு ஆபிரிக்காவின் மீதாக உதயமாகி, கிழக்கு ஆசியா மற்றும் அவுத்திரேலியா மேலாக மறையும்.
உச்ச மறைப்பின் போது புவியின் நிலை |
புலப்படும் இடங்களின் வரைபடம் |
பின்னணி
தொகுபுவியின் நிழல் பகுதியில் நிலவு பயணிக்கும் போது நிலவு மறைப்பு நிகழ்கிறது. நிலவு மறைப்பின் ஆரம்பத்தில் புவியின் நிழல் நிலவொளியை முதலில் கருமையாக்கும். பின்னர் இது நிலவினை முழுமையாக மூடும். இதனால் நிலவு சிவப்பு நிறமாக மாறும் ( இது வளிமண்டலத் தன்மையைப் பொறுத்து மாறுபடலாம்).[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.vikatan.com/news/health/132211-lunar-eclipse-and-its-affect-in-human-health.html
- ↑ https://earth-chronicles.com/space/in-2018-the-longest-lunar-eclipse-will-take-place-in-100-years.html
- ↑ Fred Espenak; Jean Meeus. "Visual Appearance of Lunar Eclipses". NASA. பார்க்கப்பட்ட நாள் April 13, 2014.
{{cite web}}
: Unknown parameter|last-author-amp=
ignored (help)