நிலீனா ஆபிரகாம்
நிலீனா ஆபிரகாம் (Nileena Abraham) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளரும் மொழி பெயர்ப்பாளருமாவார். வங்காளதேசத்தின் பாப்னா நகரில் 1925 ஆம் ஆண்டு சூலை மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] வங்காள மொழியில் அரசியல் அறிவியல் மற்றும் வரலாறு ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற பிறகு நிலீனா கேரளாவுக்குச் சென்று, எர்ணாகுளத்தில் உள்ள மகாராசா கல்லூரியில் வங்காள மொழி பேராசிரியராகவும், திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டு திராவிட மொழியியல் பள்ளியில் முனைவர் சுனிதி குமார் சாட்டர்சி உடன் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
தொழில்
தொகுஎட்டுக்கும் மேற்பட்ட வங்கமொழிப் படைப்புகளை மலையாளத்திலும் பத்து மலையாள படைப்புகளை வங்க மொழியிலும் மொழிபெயர்த்துள்ளார். வைக்கம் முகம்மது பசீரின் மலையாள சிறுகதைகளின் தொகுப்பான பாத்தும்மாயுடே அடு மற்றும் பால்யகலாசகியின் வங்காள மொழி மொழிபெயர்ப்பிற்காக 1989 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பு பரிசை பெற்றார்.[2] எர்ணாகுளத்தில் வசிக்கும் நிலீனா ஆபிரகாம் தர்யனை திருமணம் செய்துகொண்டார்.[3][4]
பகுதி நூல் பட்டியல்
தொகுமலையாளத்தில் மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆரோக்யநிகேதனம்
- எழு சுவடு
- இரும்பழிகள் (2 பாகங்கள்)
- மிதுனலக்னம்
- அவன் வருன்னு
மேற்கோள்கள்
தொகு- ↑ Dutt, Kartik Chandra, Who's who of Indian Writers, 1999: A-M, சாகித்திய அகாதமி, New Delhi, 1999
- ↑ "Akademi Translation Prizes 1989-2005". tesla.websitewelcome.com. Archived from the original on 8 May 2012. பார்க்கப்பட்ட நாள் 7 August 2012.
- ↑ Akhilavijnanakosam; D.C.Books; Kottayam
- ↑ Sahithyakara Directory ; Kerala Sahithya Academy,Thrissur