சுனிதி குமார் சாட்டர்சி

சுனிதி குமார் சட்டர்ஜி (Suniti Kumar Chatterji, 26 நவம்பர் 1890 – 29 மே 1977) இந்திய மொழியிலாளாரும், கல்வியாளரும், எழுத்தாளரும் ஆவார். இந்திய அரசு வழங்கும் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் விருது இவருக்கு 1955ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.[1]

சுனிதி குமார் சாட்டர்சி
1950ல் சுனிதி குமார் சட்டர்ஜி
பிறப்பு(1890-11-26)26 நவம்பர் 1890
அவுரா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு29 மே 1977(1977-05-29) (அகவை 86)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
பணிமொழியியலாளர், கல்வியாளர், எழுத்தாளர்
விருதுகள்பத்ம விபூசண் (1955)
கையொப்பம்

கல்வியும் வாழ்க்கையும்

தொகு

அவுராவில் உள்ள சிவ்பூர் என்னும் சிற்றுரில் பிறந்தார். ஆங்கிலத்தில் இளங்கலை (சிறப்பு) 1911 ஆம் ஆண்டிலும் முதுகலைக் கல்வியை 1913 ஆம் ஆண்டிலும் முடித்தார். அதே ஆண்டில் கொல்கத்தா வித்தியசாகர் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். 1914ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழித் துறையில் உதவி பேராசிரியராகச் சேர்ந்து, 1919 வரை பணியாற்றினார். ரவீந்திரநாத் தாகூர் மலாயா, சுமத்ரா, ஜாவா, பாலி போன்ற நாடுகளுக்குச் சென்றபோது அவருடன் சுனிதி குமார் சாட்டர்சியும் சென்றார்.

பின்னர் இலண்டன் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் சேர்ந்து பிராகிருதம், பாரசீக மொழி கோதிக் மொழி மற்றும் பழைய ஐரிய மொழிகளைக் கற்றார். பின்னர் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் இணைந்து இந்திய-ஆரிய மொழிகள், சிலாவிய மொழிகள், கிரேக்க மொழி மற்றும் இலத்தீன் மொழிகளில் ஆய்வுகள் மேற்கொண்டார்.

1922ஆம் ஆண்டில் இந்தியா திரும்பிய சுனிதி குமார் சாட்டஜி, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மொழியியல் மற்றும் மொழி ஒலிப்பியல் துறையில் பேராசிரியாக சேர்ந்தார். 1952ல் பணி ஓய்வு பெற்ற சட்டர்ஜி 1965 வரை மதிப்புறு பேராசிரியாக பல மொழி ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றினார்.

கராச்சியில் நடந்த அனைத்திந்திய இந்தி மாநாட்டில் தலைமை தாங்கி உரையாற்றினார். ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற மொழியியல் மாநாடுகளில் கலந்து கொண்டார்.

வங்க மொழியின் மூலமும் வளர்ச்சியும் என்னும் இவரது நூல் சாட்டர்சியின் பெரும் படைப்பாகக் கருதப்படுகிறது.[2]

வங்க மொழியின் ஒலியன்கள் பற்றிய இவருடைய ஆய்வு வங்க மொழியியலுக்கு அட்டைப்படையாக விளங்குகிறது.

பிற பணிகள்

தொகு
  • 1952-58 ஆண்டுகளில் மேற்கு வங்க சட்டமேலவைத் தலைவராக இருந்தார்.
  • 1969 இல் சாகித்ய அகாதமியின் தலைவராக ஆனார்.
  • எமெரிடஸ் பேராசிரியர், தேசியப் பேராசிரியர் ஆகிய மதிப்புமிகு பதவிகளில் இருந்தார்.

எழுதிய நூல்களில் சில

தொகு
  • வங்க மொழியின் மூலமும் வளர்ச்சியும் [3]
  • வங்க மொழி ஒலியன்கள் படிப்பு
  • இந்தோ ஆரியமும் இந்தியும்
  • இராமாயணம்: தோற்றம்,வரலாறு தன்மை

இறப்பு

தொகு

29 மே 1977 அன்று முதுமை காரணமாக கொல்கத்தாவில் மறைந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-10. பார்க்கப்பட்ட நாள் 2016-09-25.
  3. https://archive.org/details/OriginDevelopmentOfBengali

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதி_குமார்_சாட்டர்சி&oldid=4105344" இலிருந்து மீள்விக்கப்பட்டது