நிவேதிதா திவாரி
நிவேதிதா திவாரி (Nivedita Tiwari) (பிறந்தது: 1985 நவம்பர் 24) ஜீ தொலைக்காட்சியின் பாகோன்வாலி - பாண்டே அப்னி தக்தீர் என்ற தொடரில் ரன்ஜுன் என்ற வேடத்திலும் & தொலைக்காட்சியின் கங்கா என்றத் தொடரில் சுப்ரியா என்ற வேடத்தில் நடித்ததற்காக பிரபலமான இந்திய நடிகையாவார்.
நிவேதிதா திவாரி | |
---|---|
2012இல் நிவேதிதா திவாரி | |
பிறப்பு | 24 நவம்பர் 1985 அயோத்தி, உத்தரப் பிரதேசம், இந்தியா |
இருப்பிடம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஜேபி அகதாமி, பைசாபாத் ராம்ஜாஸ் கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2010 முதல் தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | ஆங்குர் பெகு |
வலைத்தளம் | |
Nivedita Tiwari Nivedita Tiwari Blog |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுநிவேதிதா உத்தரப்பிரதேச அயோத்தியில் பிறந்து வளர்ந்தார். அயோத்தியின் ஜே.பி. அகாடமியிலிருந்து பள்ளிப்படிப்பை முடித்த இவர் , தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றார். [1] [2]
திரைப்பட மற்றும் தொலைக்காட்சி வாழ்க்கை
தொகுகலர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பாலிகா வாதுவில் ஆனந்தி என்றா வேடத்தில் நடிக்க மூன்று பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டபோது நிவேதிதா ஆரம்பத்தில் அறியப்பட்டார். [2] [3] பின்னர் இவர் பாகோன்வாலி - பாண்டே அப்னி தக்தீர் என்ற படத்தில் ரன்ஜுன் மிஸ்ரா என்ற பெண்ணாக நடித்த்ரிந்தார். [4] இந்த நிகழ்ச்சி 2010-2012 முதல் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. [5] இந்த காலகட்டத்தில், யாகான் மெயின் கர் கர் கெலி மற்றும் ஸ்டார் யா ராக்ஸ்டார் போன்ற நிகழ்ச்சிகளில் நிவேதிதா விருந்தினராக தோன்றினார். [6] [7] இவர் ஒரு நடன நிகழ்ச்சியில் ராம் மிலாயி ஜோடியின் ஒரு அத்தியாயத்திலும் தோன்றினார். [8]
<i id="mwOQ">காப்</i> என்றத் திரைப்படத்தில் நிவேதிதா சுரேலி என்ற பெண்ணாக நடித்தார். [9] கௌரவக் கொலைகளைச் சுற்றியுள்ள பிரச்சினைகளைத் திரைப்படம் தொட்டது.
2012 ம் ஆண்டின் இறுதியில், ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியின் <i id="mwPg">லகோன் மெய்ன் ஏக்கின்</i> என்ற வாராந்திர நிகழ்ச்சியின் இரண்டு வெவ்வேறு அத்தியாயங்களில் தோன்றினார். நிகழ்ச்சியின் ஒவ்வொரு அத்தியாயமும் நிஜ வாழ்க்கை நிகழ்வுகளின் அடிப்படையில் ஒரு வித்தியாசமான கதையை பிரதிபலித்தது. முதல் தோற்றத்தில், ரவி துபே ஜோடியாக அஃப்ரீன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். [10] [11] அத்தியாயம் வரதட்சணை பிரச்சினையில் கவனம் செலுத்தியது. அடுத்து, அங்கித் பாத்லா மற்றும் ரீட்டா பதுரி ஆகியோருடன் ப்ரீத்தி மற்றும் சுனில் ஆகியோரின் கதையையும், அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான போராட்டத்தையும் சொன்ன ஒரு அத்தியாயத்தில் நடித்தார். [12] [13] ராஜ் சிங் அரோரா மற்றும் பல்லவி குப்தா ஆகியோருடன் யே ஹை ஆஷிகிவியின் ஒரு அத்தியாயத்திலும் இவர் தோன்றினார். [14]
2014 ஆம் ஆண்டில், சஹாரா ஒன் தொலைக்காட்சியின் ஃபிர் ஜீன் கி தமன்னா ஹை என்பதில் தேவயானியாகவும், நீலி சத்ரி வாலி என்பதில் பார்வதியாகவும் நடித்தார் . [15] நிவேதிதா பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் தோன்றியுள்ளார்.
கங்கா என்றத் தொடரில் சுப்ரியாவாக நிவேதிதா தோன்றினார் அடுத்ததாக பிரகாஷ் ஜா தயாரிக்கும் பிராடு சயான் படத்தில் காணப்படுகிறார். [16] இவர் தற்போது புது தில்லியைச் சேர்ந்த விஷன் இந்தியா அறக்கட்டளையில் ஒரு ஆராய்ச்சி சக ஊழியராக உள்ளார். இது இளைஞர்களிடையே பொதுத் தலைமையில் செயல்படுகிறது. [17]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுநிவேதிதா படைப்பு எழுத்து, பாடல், வாசிப்பு ஆகியவற்றை ரசிக்கிறார். [4] [18] டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியிடப்பட்ட ஒரு சிறு கவிதையுடன் ஒரு கருத்துக் கட்டுரையும், தனது சொந்த படைப்புகளை தனது வலைப்பதிவில் தவறாமல் இடுகிறார். [1] [19] நிவேதிதா தனது சொந்த ஊரான பைசாபாத்தில் 2011 திசம்பர் 4, அன்று ஸ்வஸ்த் இந்தியாவின் இணை நிறுவனரும் இயக்குநருமான அங்கூர் பெகு என்பவரை மணந்தார். [20]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Tiwari, Nivedita. "A child of Ayodhya, I hate seeing it made a cause of discord". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 September 2010. பார்க்கப்பட்ட நாள் 14 August 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2.0 2.1 Das, Madhuparna. "Television". The Telegraph. 6 July 2010. பார்க்கப்பட்ட நாள் 14 August 2012.
- ↑ "Who Will Be Anandi?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 July 2010. Archived from the original on 3 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 14 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 4.0 4.1 "That's NOT VIDYA BALAN! Introducing Nivedita Tiwari in Bhagonwali". ZeeUK.com. 12 July 2010. Archived from the original on 26 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "'Bhagonwali' to be pulled off air". Filmitown.com. 25 January 2012. பார்க்கப்பட்ட நாள் 14 August 2012.
- ↑ யூடியூபில் Yahaaan Main Ghar Ghar Kheli Diwali Special Oct. 25 '11 Song - 9
- ↑ யூடியூபில் Star Ya Rockstar : Episode 7 - 29-10-2011
- ↑ "Umeed Ka Naya Chehra; Zee leading ladies perform". ZeeTV. பார்க்கப்பட்ட நாள் 9 October 2012.
- ↑ "Khap Movie Preview". Yahoo News India. 22 July 2011. பார்க்கப்பட்ட நாள் 14 August 2012.
- ↑ "Sohail and Afrin start a movement against dowry". Star Plus. பார்க்கப்பட்ட நாள் 12 December 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Ravi Dubey and Sunny Goraya in Lakhon Mein Ek". TellyChakkar.com. 5 November 2012. Archived from the original on 8 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 December 2012.
- ↑ "Ankit Bathla, Nivedita Tiwari and Rita Bhaduri in Lakhon Mein Ek". TellyChakkar.com. 14 December 2012. Archived from the original on 16 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 4 January 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Preeti gets married to Sunil". Star Plus. பார்க்கப்பட்ட நாள் 4 January 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Yeh Hai Aashiqui is a progressive show: Raj Singh Arora". The Times of India. 2 November 2013. பார்க்கப்பட்ட நாள் 23 December 2013.
- ↑ Maheshwri, Neha. "Shivaye gets his Parvati on TV show". The Times of India. 18 April 2015. பார்க்கப்பட்ட நாள் 18 April 2015.
- ↑ "Fraud Saiyaan trailer: Arshad Warsi, Sara Loren starrer to hit the silver screens on January 18, 2019". Newsx.com. newsx. பார்க்கப்பட்ட நாள் 28 December 2018.
- ↑ "Team". 19 December 2014. Archived from the original on 22 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Mad about Harry Potter!". ZeeTV.com. Archived from the original on 25 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 15 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Tiwari, Nivedita. "Dew Drops Slowly and Dreams Gather..." niveditatiwari.blogspot.com. 24 July 2012. பார்க்கப்பட்ட நாள் 15 August 2012.
- ↑ "Nivedita Tiwari is enjoying her married life". TellyChakkar.com. 30 May 2012. பார்க்கப்பட்ட நாள் 18 April 2015.