நிஹாரி

வங்கதேச உணவு


நிஹாரி (இந்தி: निहारी; பெங்காலி: নিহারী; உருது: نہاری) என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் முகலாயப் பேரரசின் கீழ் 18 ஆம் நூற்றாண்டில் அவாத்தின் தலைநகரான லக்னோவில் தோன்றிய ஒரு உணவு ஆகும். இது மெதுவாகா சமைக்கப்பட்ட இறைச்சியாகும், முக்கியமாக மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழி மற்றும் எலும்பு மஜ்ஜை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது கருப்பு மிளகுடன் தொடர்புடைய திப்பிலி உடன் சுவைக்கப்படுகிறது.

நிஹாரி
டெல்லியில் பரிமாறப்பட்ட நிஹாரி
பரிமாறப்படும் வெப்பநிலைகாலை, மதியம், இரவு
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிலக்னோ, அவாத்
தொடர்புடைய சமையல் வகைகள்இந்தியா, பாக்கித்தான், வங்காள தேசம்
கண்டுபிடிப்பு18 ஆம் நூற்றாண்டு
பரிமாறப்படும் வெப்பநிலைவெப்பமாக
பிற தகவல்கள்ரொட்டி, சோறு

சொற்பிறப்பியல்

தொகு

நிஹாரி என்ற பெயர் அரபு நஹர் (نهار) என்பதிலிருந்து உருவானது, அதாவது "காலை" என பொருள்படும், இது முதலில் முகலாயப் பேரரசின் நவாப்புகளால் வைகறை தொழுகைக்கு பிறகு காலை உணவாக உண்ணப்பட்டது.[1]

வரலாறு

தொகு

பல்வகையான ஆதாரங்களின் படி பார்த்தால், முகலாயப் பேரரசின் இறுதிக்காலத்தில்,லக்னோ அவாத்தில் (இன்றைய உத்திரபிரதேசம்,இந்தியா) அரச சமயலறைக்கூடங்களில் உருவானது நிஹாரி. வெறும் வயிற்றுடன் உழைக்கும் குடிமக்களால்,அதிக ஆற்றல் கொண்ட காலை உணவாக எடுத்துக்கொள்ளப்பட்டது குறிப்பாக குளிர்பருவ காலங்களில்.பின்னர் இந்த உணாவானது பிரபலமைடந்தது,முகலாயர் கால நவாப்புகளின் உணவில் முதன்மையானதாக மாறியது.[2][3] நிஹாரி இந்திய துணைக் கண்டத்தின் இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த உணவு வகைகளுடன் உருவாக்கப்பட்டது. குறிப்பாக பழைய டெல்லி, லக்னோ, டாக்கா மற்றும் சிட்டகாங் பகுதிகளில் இது ஒரு பிரபலமான சுவையாக உள்ளது. இந்த உணவு அதன் காரமான தன்மை, சுவை, அமைப்பு மற்றும் குழம்பு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது.[4]

பிரபலம்

தொகு

நிஹாரி என்பது லக்னோ, டெல்லி மற்றும் போபால் ஆகிய இந்திய இஸ்லாமிய சமூகங்களின் பாரம்பரிய உணவாகும். 1947 இல் இந்தியாவின் பிரிவினையைத் தொடர்ந்து, வட இந்தியாவில் இருந்து பல உருது மொழி பேசும் இஸ்லாமியர்கள் மேற்கு பாகிஸ்தானில் உள்ள கராச்சி மற்றும் கிழக்கு பாகிஸ்தானில் உள்ள டாக்காவிற்கு குடிபெயர்ந்தனர், மேலும் பல உணவகங்களை நிறுவினர். கராச்சியில், நிஹாரி பெரிய அளவில் வெற்றியடைந்தது, மேலும் விரைவில் பாகிஸ்தான் முழுவதும் பிரபலமடைந்து பரவியது.[5]

சில உணவகங்களில், ஒவ்வொரு நாளும் எஞ்சியிருக்கும் நிஹாரியில் இருந்து சில கிலோகிராம்கள் அடுத்த நாள் பானையில் சேர்க்கப்படுகின்றன; உணவு மீண்டும் பயன்படுத்தப்படும் இந்த பகுதி தார் என்று அழைக்கப்படுகிறது மற்றும் இது ஒரு தனித்துவமான சுவையை வழங்கும் என்று நம்பப்படுகிறது. பழைய தில்லியில் உள்ள சில நிஹாரி விற்பனை நிலையங்கள், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தார் சுழற்சியை மாற்றாமல் வைத்துள்ளதாக கூறுகின்றனர்.[6]

மருத்துவ பலன்கள்

தொகு

நிஹாரி காய்ச்சல் மற்றும் சாதாரண சளி ஆகியவற்றிக்கு வீட்டு மருந்தாக பயன்படுகிறது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Sengupta, Sushmita (3 January 2018). "Nihari: History Of The Meaty and Buttery Breakfast Staple of The Mughals". NDTV Food. https://food.ndtv.com/food-drinks/nihari-history-of-the-meaty-and-buttery-breakfast-staple-of-the-mughals-1795358. 
  2. "In celebration of winter's perfect dish, the mutton nihari!" (in en). Hindustan Times. 4 November 2017. https://www.hindustantimes.com/brunch/in-celebration-of-winter-s-perfect-dish-the-mutton-nihari/story-aWAvsL8kFp5CKmk535PYDK.html. 
  3. "Do you know what is Nalli Nihari? History of Nihari and recipe of Nalli Nihari". infusecooking.com. infusecooking.com. 29 June 2021. Archived from the original on 6 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 28 June 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Nahari". Archived from the original on 13 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 March 2016.
  5. "Nihari a la Mexican style". The Hindu Business Line. பார்க்கப்பட்ட நாள் 5 March 2016.
  6. "Dilli Ka Dastarkhwan". பார்க்கப்பட்ட நாள் 28 November 2014.
  7. "What is Nihari?". Archived from the original on 19 December 2014. பார்க்கப்பட்ட நாள் 28 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிஹாரி&oldid=4110292" இலிருந்து மீள்விக்கப்பட்டது