நீங்காத நினைவு
1963ஆம் ஆண்டு திரைப்படம்
'நீங்காத நினைவு' , 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டபிள்யூ. ஆர். சுப்பாராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். தீதார் என்ற 1951 ஆம் ஆண்டு வெளியான இந்திப் படத்தின், தமிழ்ப் பதிப்பே இத்திரைப்படமாகும்.[1]
நீங்காத நினைவு | |
---|---|
இயக்கம் | டபிள்யூ. ஆர். சுப்பாராவ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் விஜயகுமாரி |
வெளியீடு | மார்ச்சு 15, 1963 |
நீளம் | 4411 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள் தொகு
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். வாலி, அ. மருதகாசி, கண்ணதாசன், கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் பாடல்களை இயற்றினர். பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோர் பின்னணி பாடினார்கள்.
நேற்று வந்து, இன்றிருந்து, நாளை போகும்.. என்ற பாடலே, டி. எம். சௌந்தரராஜன் பாடிய, முதல், வாலியின் பாடலாகும்.[2]
நௌஷாத் இசையமைத்த, இந்தி பாடலின் மெட்டில் அமைந்த, "ஓ சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே".. என்ற பாடல் பிரபலமடைந்தது.[1]
எண். | பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு (mm:ss) |
---|---|---|---|---|
1 | ஓ சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே.. | பி. சுசீலா & எல். ஆர். ஈஸ்வரி | வாலி | 03:04 |
2 | நேற்று வந்து, இன்றிருந்து, நாளை போகும்.. | டி. எம். சௌந்தரராஜன் | 03:24 | |
3 | ஓ சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே.. - குறும்பாடல் | 01:17 | ||
4 | பார்த்ததுண்டா, கேட்டதுண்டா.. | குழுவினருடன், எல். ஆர். ஈஸ்வரி | அ. மருதகாசி | 02:28 |
5 | கண் பார்வை கவி பாடும்.. | பி. சுசீலா | 03:26 | |
6 | எங்கிருந்த போதும் உனை மறக்கமுடியுமா.. | 03:08 | ||
7 | உன் கதையும் என் கதையும்.. | டி. எம். சௌந்தரராஜன் | 03:19 | |
8 | அன்பு வாழ்க, ஆசை வாழ்க.. | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | கண்ணதாசன் | 03:22 |
9 | கதையை கேட்டதும் மறந்துவிடு.. | பி. பி. ஸ்ரீநிவாஸ் | கொத்தமங்கலம் சுப்பு | 04:09 |
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 ராண்டார் கை. "SSR and Vijayakumari in Neengatha Ninaivu (1963)". தி இந்து. 28 செப்டம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 128 — 129.