நீணநீர்க் காய்ச்சல்
நீணநீர்க் காய்ச்சல் (Theileriosis) என்னும் நோய் மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து மத்திய கிழக்குப் பகுதிவரையும், மொராக்கோவிலிருந்து, இந்தியா மற்றும் சீனாவின் மேற்குப் பகுதிகள்வரையிலான கால்நடைகளைத் தாக்கும் நோயாகும். இவை தெய்லீரியா என்னும் இரத்த ஓரணு ஒட்டுண்ணியின் மூலம் ஏற்படுகிறது. ஹயலோமா எனப்படும் உண்ணிகள் மூலம் இந்நோய் பரவுகிறது. ஈஸ்ட் கோஸ்ட் காய்ச்சலுடன் ஒப்பிடும்போது இந்த நோய் ஒரு காலத்தில் "இலகுவானதாக" கருதப்பட்டது. இப்பிராந்தியத்தில் ஐரோப்பிய கலப்பின மாட்டு இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இந்நோய் பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகளில் ஒன்றாக மாறியது.[1]
நாட்டுவகை கால்நடைகள் நல்ல நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டதாக உள்ளதால் இந்த விலங்குகள் நோயை தாங்குகின்றன, குறிப்பாக எருமைகள், குறைந்த பாதிப்புக்குள்ளாகின்றன.[2]
பரவும் முறை
தொகுஇந்நோயானது ஹயலோமா என்ற உண்ணிகள் மூலம் பரவுகிறது. ஹயலோமா உண்ணிகள் நீணநீர்க் காய்ச்சல் பாதிக்கப்பட்ட மாடுகளைக் கடிக்கும் பொழுது தெய்லேரியா ஓரணு ஒட்டுண்ணிகள் உண்ணியின் உமிழ்நீர் வழியாக உண்ணியின் உடலுக்குள் சென்று பெருக்கமடையும்.இதே உண்ணி மற்ற மாடுகளைக் கடிக்கும் பொழுது மற்ற மாடுகளுக்கும் பரவுகிறது.
நோய்க்கான அறிகுறிகள்
தொகு- காய்ச்சல்
- நீணநீர்க்கணு வீக்கம்
- மூச்சு விடுதலில் சிரமம்
- பால் உற்பத்தி குறைதல்
- இரத்தச்சோகை
- மஞ்சள் காமாலை
மேற்கோள்
தொகு- ↑ With mortalities up to 50 to 80 percent in the 1980s (L. Mahin).
- ↑ Theileriosis - Cattle reviewed and published by WikiVet, accessed 11 October 2011.