நீராற்பகுப்பி
நீராற்பகுப்பி (hydrolase) என்னும் நொதியம் வேதிப்பிணைப்புகளை நீராற்பகுக்கும் வினைகளில் வினையூக்கியாகச் செயல்படுகிறது. உதாரணமாக, கீழ்காணும் வினையை வினையூக்கம் செய்யும் நொதி நீராற்பகுப்பியாகும்:
- A–B + H2O → A–OH + B–H
வகைப்பாடு
தொகுநொதியங்களை வகைப்படுத்தும் முறைமையில் நீராற்பகுப்பிகள் நொதிய ஆணைக்குழு எண் ஈ.சி. 3 (EC 3) வகையாகக் கொள்ளப்படுகின்றன. மேலும், நொதியங்கள் எந்தவிதமான பிணைப்புகள் மீது செயல்படுகின்றது என்பதை அடிப்படையாக வைத்து நீராற்பகுப்பிகள் பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன[1][2]:
- EC 3.1: மணமியப்பிணைப்புகள் (மணமியச்சிதைப்பிகள், உட்கருச்சிதைப்பிகள், பாஸ்போஇருமணமியச்சிதைப்பிகள், கொழுமியச்சிதைப்பிகள், பாஸ்பேட்சிதைப்பிகள்)
- EC 3.2: சர்க்கரைகள் (டி.என்.ஏ கிளைகோசில் சிதைப்பிகள், கிளைக்கோசைடு நீராற்பகுப்பி)
- EC 3.3: ஈதர் பிணைப்புகள்
- EC 3.4: புரதக்கூறு பிணைப்புகள் (புரதச்சிதைப்பிகள்/புரதக்கூறு சிதைப்பிகள்)
- EC 3.5: புரதக்கூறு பிணைப்புகளைத் தவிர்த்த கார்பன்-நைட்ரசன் பிணைப்புகள்
- EC 3.6: அமிலநீரிலிகள் (அமிலநீரிலி நீராற்பகுப்பிகள், சுருளைச்சிதைப்பி, குவானோசின் டிரைஃபாஸ்ஃபேட்டு நீராற்பகுப்பி)
- EC 3.7: கார்பன்-கார்பன் பிணைப்புகள்
- EC 3.8: ஹெலைடு பிணைப்புகள்
- EC 3.9: பாஸ்பரஸ்- நைட்ரசன் பிணைப்புகள்
- EC 3.10: கந்தகம்- நைட்ரசன் பிணைப்புகள்
- EC 3.11: கார்பன் - பாஸ்பரஸ் பிணைப்புகள்
- EC 3.12: கந்தகம்-கந்தகம் பிணைப்புகள்
- EC 3.13: கார்பன் - கந்தகம் பிணைப்புகள்