நீராற்பகுப்பு மாறிலி
நீராற்பகுப்பு மாறிலி (hydrolysis constant) என்பது நீராற்பகுப்பு வினைக்கான ஒரு சமநிலை மாறிலி ஆகும்.[1]
உதாரணமாக அலுமினியம் குளோரைடு போன்ற உலோக உப்பு நீர்க்கரைசல் ஒன்றில் கரைந்திருக்குமேயானால் அதிலுள்ள உலோக நேர்மின் அயனிக்கள் லூயி அமிலமாக செயல்படுகின்றன. மேலும் கரைசலில் உள்ள நீர் மூலக்கூறுகளை நீராற்பகுப்பு செய்கின்றன.[2]
- Al3+ + 2H2O → AlOH2+ + H3O+
இவ்வினையின் நீராற்பகுப்பு மாறிலி பின்வருமாறு காட்டப்படுகிறது.
- Kநீராற்பகுப்பு = [H3O+] * [AlOH2+] / [Al3+]
நீராற்பகுப்பு மாறிலியின் பொதுவான மாதிரி படிவம் இவ்வாறு விளக்கப்படுகிறது.
- Ka = [H3O+] * [A−] / [HA]
இங்கு A− என்பது எந்தவொரு காரத்தையும் மற்றும் HA என்பது எந்தவொரு அமிலத்தையும் குறிக்கும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Definition of hydrolysis_constant - Chemistry Dictionary
- ↑ Research and Education Association. The best test preparation for the GRE Chemistry test., 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87891-600-8. Page 87.
- ↑ Hydrolysis