நீர் உண்டாக்கும் அரிப்பு (மருத்துவம்)
நீர் உண்டாக்கும் அரிப்பு (aquagenic pruritis) என்பது மனிதர்களின் தோலின் மீது நீர் படும் போது அரிப்பு ஏற்படும் நோய் ஆகும். இந்த அரிப்பு மிகக் கடுமையாக குத்துவது போல் தீவிரமாக இருக்கும்.
நீர் உண்டாக்கும் அரிப்பு (Aquagenic Prurits) Classification and external resources | |
ஐ.சி.டி.-10 | L29.8 (ILDS L29.83) |
---|
காட்சியளிப்பு
தொகுநீரோ அல்லது ஈரப்பதமுள்ள காற்றோ தோலின் மீது படும் போது இந்நோயின் அறிகுறிகள் உடனடியாக உணரப்படும். இது ஒரு மணிநேரம் வரை கூட நீடிக்கும். வியர்வை, வீசும் காற்று, வெப்பநிலை வேறுபாடு, உடை மாற்றுதல், ஈரப்பதமுள்ள தரையில் படுக்க முயற்சித்தல் போன்றவற்றாலும் இது தூண்டப்படலாம்.
இது இரு பாலரிலும் எவ்வயதினரிலும் காணப்படலாம். பாலிசைதீமியா (polycythemia) அல்லது மிகை இரத்தசெல் நோயின் முதன்மை அறிகுறியாக இது வெளிப்படலாம்.
சில நேரங்களில் இது பரம்பரை வழியாகக் கடத்தப்படுவதாய் அறியப்படுகிறது. இந்நோய் குறித்து மிகக் குறைந்த ஆராய்ச்சியே செய்யப்பட்டுள்ளது; இன்னும் அறியப்பட வேண்டியது நிறைய உள்ளது.
இந்நோய் மனிதரின் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகள் அனைத்தையும் பாதிக்கும் என்பதால் இது சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படக் கூடிய நோய் அன்று. இதனால் பாதிக்கப்பட்டோர் மனஉளைச்சல் ஏற்பட்டு அல்லலுறுவார்.
நோய்த்தோற்றவியல்
தொகுமாஸ்ட் செல்களிலிருந்து (mast cell) ஹிஸ்டமைன் (histamine) போன்ற பொருட்கள் வெளிப்படுதல் காரணமாக இது உருவாகலாம் என்று கருதப்படுகிறது.
மருத்துவம்
தொகு- கேப்சஸின் (மிளகாயிலிருந்து பெறப்படும் பொருள்) பசையைத் தடவுதல்
- வடிகட்டப்பட்ட புறா ஊதாக்கதிர் B மூலம் ஒளிமருத்துவம்
- ஹிஸ்டமைன் தடுப்பான்கள்
- நால்ட்ரெக்சோன் (naltrexone) - ஓப்பிய வழிப் பெறுதி