சமய திவாகர விருத்தி
(நீலகேசி உரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சமய திவாகர விருத்தி [1] என்னும் உரைநூல் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநூல்களில் ஒன்று. இது ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசி நூலுக்கு எழுதப்பட்ட உரை. இதனை '''நீலகேசி உரை''' எனவும் குறிப்பிடுகின்றனர். இதனை எழுதியவர் வாமன முனிவர். இவர் சைனர். வடமொழியிலும், தமிழிலும் வல்லவரான இவர் தமிழில் சமய திவாகர விருத்தி என்னும் நூல் செய்த காரணத்தில் இவரைச் சமய திவார முனிவர் எனவும் குறிப்பிடுவது வழக்கம்.
இந்த உரையின் சிறப்புகள்;
- இறந்துபோன குண்டலகேசி நூலின் 20 பாடல்கள் இந்த உரையில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளன. குண்டலகேசியின் கதை உரையில் சொல்லப்பட்டுள்ளது. குண்டலகேசி நூலின் ஆசிரியர் நாதகுத்தனார் என்பதும் இவ்வுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பிம்பிசாரக் கதை, மாணாவூர்ப் பதிகம் என்னும் நூல்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
- மேற்கோள்களாக எடுத்தாளப்பட்டுள்ளவை
- கிடைக்கப்பெறாத சில இலக்கண நூற்பாக்கள்
- கிடைக்கப்பெறும் தொல்காப்பியம், நன்னூல் நூற்பாக்கள்
- உபநிடதமேற்கோள்கள்
- அறநெறிச்சாரம், அருங்கலச் செப்பு முதலான சைன நூல்கள்
- கொலைமறுத்தல் பற்றிக் கூறும் வெண்பா நூலின் விரிவு
- புத்தரை இவர் ஈழம் அடிப்படுத்த தாடையாழ்வார் எனக் குறிப்பிடுகிறார்.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑ சக்கரவர்த்தி நயினார் என்பவர் இதனை அச்சிட்டு வெளிட்டுள்ளார்.