நீலக் கடற்காயல் (ஐஸ்லாந்து)
நீலக் கடற்காயல் (ஐஸ்லாந்து) (Blue Lagoon (geothermal spa)) ஐஸ்லாந்தின் மிக சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இது ஒரு எரிமலை மூலம் உருவான ஒரு சூடான நீராவி பகுதியாகும். இந்த இடம் தென்மேற்கு ஐஸ்லாந்திலுள்ள ரேக்ஜேன்ஸ் தீபகற்பத்தில் கிரின்ட்விக் (Grindvik) என்னும் இடத்தில் ஒரு லாவா நிலத்தில் அமைந்துள்ளது. இது கெஃப்லாவிக் (Keflavik) விமான நிலையத்திலிருந்து 13 கிமீ (8 மைல்) தூரத்திலும், ரேக்ஜாவிக் நகரிலிருந்து 39 கிமீ (24 மைல்) தூரத்திலும் அமைந்துள்ளது. இதனருகில் ஒரு புவிவெப்ப மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இவ்விடம் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும்.
சூடான நீரில் சிலிக்கா மற்றும் சல்பர் போன்ற கனிமங்கள் அதிகமாக உள்ளன. எனவே சொரியாசிஸ் எனப்படும் தோல் நோயை இதன் நீர் குணப்படுத்த உதவுகிறது.[1] இதன் வெப்ப நிலை சராசரியாக 40 டிகிரி செல்சியஸ் உள்ளது. இது ஆண்டு முழுவதும் உறைபனி நிலையிலும் அதே வெப்பத்துடன் இருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Iceland's Energy Lessons"Newsweek, 14 April 2008, link accessed 9 April 2008