நீலன், இராமாயணக் காவியத்தில் கூறப்படும் வானரங்களின் ஒரு கூட்டத்தின் தலைவன். சுக்கிரீவனின் தலைமைப்படைத் தலைவர்களில் ஒருவர். [1][2] சிறந்த கட்டடக் கலைஞர். நீலன் மற்றும் நளன் தலைமையில் வானரக் கூட்டத்தின் உதவியுடன், இராமேஸ்வரம் முதல் இலங்கை வரை கடற்பாலம் நிறுவப்பட்டது. [3]நீலன், அக்கினிதேவனின் அம்சமாகப் பிறந்தவன். [3] இராவணன் கவர்ந்து சென்ற சீதையை, தெற்கு நோக்கித் தேடிய ஜாம்பவான், அங்கதன், மற்றும் அனுமார் உள்ளிட்ட வானரக் கூட்டங்களின் தலைவராக செயல்பட்டவர். [4]

நீலன்
நளன் (வெள்ளை வானரம்), நீலன் (நீல வானரம்) இராமரிடம் உரையாடுதல். இடது:நளன் மற்றும் நீலன் வானரக் கூட்டங்களுக்குக் கற்கள் மற்றும் மரங்களைக் கொண்டு கடற்பாலம் அமைப்பது குறித்துக் கட்டளையிடுதல்

இராம-இராவணப் போரின் போது, வானரப் படைத்தலைவர் நீலன், பெரும் பாறைகளைக் கொண்டு, இந்திரஜித்தின் தம்பியான பிரகஸ்தனின் தலையிலும், கழுத்திலும் தாக்கி அழிக்கிறார். (Valmiki Ramayana, book 6, canto 58, verses 53,54)[5]

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Venkatesananda pp. 270, 282, 301
  2. Lefeber & Goldman, p. 117
  3. 3.0 3.1 Mani, Vettam (1975). Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature. Delhi: Motilal Banarsidass. p. 538. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8426-0822-2.
  4. Venkatesananda pp. 270, 282, 301
  5. Rao, Desiraju Hanumanta. "Valmiki Ramayana - Yuddha Kanda - Sarga 58". www.valmikiramayan.net. பார்க்கப்பட்ட நாள் 2017-01-02.[தொடர்பிழந்த இணைப்பு]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலன்&oldid=3583225" இலிருந்து மீள்விக்கப்பட்டது