நீலம் சதுர்வேதி

நீலம் சதுர்வேதி (Neelam Chaturvedi; பிறப்பு: ஜூலை 1, 1960, கான்பூர், உத்தரப் பிரதேசம்) ஒரு இந்திய பெண்கள் மனித உரிமைகள் பாதுகாவலரும் ஆர்வலரும் ஆவார். இந்தியாவில் பாலினம் மற்றும் சாதி வன்முறை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து பிணையத்தை உருவாக்கவும் அவர் பணிபுரிகிறார். தெருக் குழந்தைகள் வளர்ப்பில் ஈடுபடவும் குழந்தைகளுக்கான மறுவாழ்வை ஊக்குவித்தல் மற்றும் ஆலோசனை சேவைகளையும், ஜனநாயக நிறுவனங்களில் பங்கு பெறுவதற்கான பெண்களின் திறனை அதிகரிக்கவும் அவர் விரும்புகிறார் [1] தனது பிராந்தியத்தில் முதல் பெண்கள் தங்குமிடம் நிறுவியுள்ளார். அவரது சமூகத்தில் வன்முறை மற்றும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்கிறார். மகளிர் உரிமைகள் தொடர்பான அவரது பணி அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மூலம் உயர்த்தப்பட்டது.[2]

நீலம் சதுர்வேதி-ஒளிப்படம்

தொழிற்சங்க செயற்பாட்டாளராக, 1970 களில் தொழிற்சங்க இயக்கத்திலும் ஒட்டுமொத்த இந்திய சமூகத்திலும் உள்ள பெண்களின் பிரச்சினைகள் குறித்த வேலைகளில் ஈடுபட்டார். உடல் மற்றும் மன வன்முறை, வரதட்சணை அமைப்பு, கற்பழிப்பு, விபச்சாரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றின் பிரச்சினைகளை எழுப்புவதற்காக பெண் தொழிலாளர் அமைப்புகளை ஏற்படுத்தினார்.[2] இவர், மஹிலா மன்ச், சாக்ஹி கேந்திரா மற்றும் மகளிர் அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு உட்பட இந்திய பெண்கள் நிறுவனங்களின் நிறுவனர் அல்லது இணை நிறுவனர் ஆவார்.[1][3][4] மகளிர் அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரும்[5] அக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமாவார்.[6][7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 http://www.amnesty.ca/women/pdf/02WANnews2.pdf பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம் Retrieved 23 July 2010
  2. 2.0 2.1 http://www.amnesty.ca/members/newsletters/pdf06.pdf பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம் Retrieved 23 July 2010
  3. "Women organisations abhor rowdy songs". Indiatimes. 18 February 2009 இம் மூலத்தில் இருந்து 11 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811085708/http://articles.timesofindia.indiatimes.com/2009-02-18/kanpur/28017375_1_songs-manch-abusive-words. பார்த்த நாள்: 21 July 2010. 
  4. "Speaking out in anger - empower students, don't ban jeans, Uttar Pradesh News". Indiaedunews.net. Archived from the original on 5 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 21 July 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Annual General Meeting 2002". Amnesty International USA. Archived from the original on 25 June 2009. பார்க்கப்பட்ட நாள் 21 July 2010.
  6. "First women’s Parliament in India to enhance women’s participation in politics". The Financial Express. பார்க்கப்பட்ட நாள் 21 July 2010. {{cite web}}: C1 control character in |title= at position 12 (help)
  7. http://www.tribuneindia.com/2009/20091103/delhi.htm பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் Retrieved 23 July 2010

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலம்_சதுர்வேதி&oldid=3587372" இலிருந்து மீள்விக்கப்பட்டது