நீலிமா கதியார்

இந்திய அரசியல்வாதி

நீலிமா கதியார் (Neelima Katiyar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் உத்தரப் பிரதேச அரசாங்கத்தின் மாநில அமைச்சராக இருந்தவரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

நீலிமா கதியார்
Neelima Katiyar
உறுப்பினர், உத்தரப் பிரதேச சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச்சு 2022
மாநில அமைச்சர் உத்தரப் பிரதேச அரசு
பதவியில்
21 ஆகத்து 2019 – 10 மார்ச்சு 2022
முன்னையவர்சதீசு குமார் நிகாம்
தொகுதிகல்யாண்பூர் சட்டமன்றத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)
உறுப்பினர், உத்தரப் பிரதேச சட்டமன்றம்
பதவியில்
11 மார்ச்சு 2017 – 10 மார்ச்சு 2022
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 திசம்பர் 1973 (1973-12-08) (அகவை 50)
கான்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பெற்றோர்பிரேம் லதா கதியார்
வாழிடம்(s)117க்யு 54 A பகுதி, சாரதா நகர், கான்பூர்
முன்னாள் கல்லூரிமுதுகலை 2001, சி. எசு. ஜெ. எம். பல்கலைக்கழகம், கான்பூர்[1]
தொழில்சமூக சேவகர், அரசியல்வாதி, தொழிலதிபர்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

நீலிமா உத்தரப் பிரதேச மாநிலம் கல்யாண்பூரில் பிறந்தார். இவர் உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சர் பிரேம் லதா கதியாரின் மகள் ஆவார்.[2]

கல்வி

தொகு

நீலிமா கான்பூர் பல்கலைக்கழகம் மற்றும் சத்ரபதி ஷாகுஜி மகாராஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் இளங்கலைப் பட்டங்களைப் பெற்றார். 

அரசியல் வாழ்க்கை

தொகு

நீலிமா 2017ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் கால்யாண்பூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு 86620 வாக்குகளைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

நீலிமா 21 ஆகத்து 2019 அன்று யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4]

நீலிமா 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமனறத் தேர்தலில் மீண்டும் கல்யான்பூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு 98997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Nilima Katiyar (Bharatiya Janata Party): Constituency – Kalyanpur (Kanpur Nagar) – Affidavit Information of Candidate". Myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2 September 2017.
  2. http://www.pressreader.com/india/the-indian-express/20170127/281831463451477. பார்க்கப்பட்ட நாள் 2 September 2017 – via PressReader. {{cite web}}: Missing or empty |title= (help)
  3. "HTML_META_TITLE". Dainik Bhaskar. பார்க்கப்பட்ட நாள் 2 September 2017.
  4. "In First Cabinet Expansion, UP CM Yogi Adityanath Inducts 18 Ministers, Promotes 5". https://www.news18.com/news/politics/in-first-cabinet-expansion-up-cm-yogi-adityanath-inducts-18-ministers-promotes-5-2278361.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலிமா_கதியார்&oldid=3689619" இலிருந்து மீள்விக்கப்பட்டது