நீல மலைகள் (Blue Mountains) என்பது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் உள்ள மலைத் தொடர் ஆகும். இதன் அடிவாரங்கள் மாநிலத் தலைநகரான சிட்னிக்கு மேற்கில் சுமார் 50 கிலோமீட்டர் (31 மைல்) இருந்து தொடங்குகின்றன.[1] இந்தப் பகுதி நெபன் ஆற்றின் மேற்கில் தொடங்குகிறது. அது காக்ஸ் நதி வரை மேற்கு நோக்கி செல்கிறது. இது முக்கியமாக ஒரு மணற்கல் பீடபூமியாகும். இம் மலைத்தொடரின் மிக உயர்ந்த புள்ளி மலை வேரொங் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1,215 மீட்டர் (3,986 அடி) மேல் உள்ளது. இம் மலை ஒரு பெரிய பகுதியாக பொிய நீல மலைகள் பகுதியில் உள்ள உலக பாரம்பரிய தளமாக உள்ளது. இம் மலைப்பகுதியில் ஏழு தேசியப் பூங்கா பகுதிகள் மற்றும் ஒரு பாதுகாப்பு பகுதி உள்ளது. நீல மலைகள் பகுதியில் நீல மலைகள் நகரத்தின் உள்ளூர் அரசாங்க பகுதிகள், ஹாக்ஸ்ஸ்பரி நகரம், லித்கோ நகரம் மற்றும் ஓபெரோன் ஆகியவை உள்ளன

விலங்குகள் தொகு

பொிய நீல மலைகள் பகுதி, 400 க்கும் அதிகமான விலங்கு வகைகளை கொண்டுள்ளது. இவற்றுள் அரிதான பாலூட்டிகள் உள்ளன, அவை புள்ளியிடப்பட்ட வால் கூவல் கோவாலா, மஞ்சள் நிறமுள்ள பெள்ளிடு கிலிட்டா் மற்றும் நீண்ட மூக்கு புட்டோரு போன்றவையாகும். நீலமலை நீர் அரணை போன்ற சில அரிய ஊர்வனங்களும் உள்ளன. இப்பகுதியில் சாம்பல் நிற கங்காருகளை வேட்டையாடும் சில டிங்கோக்கள் (காட்டு நாய்கள்) உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. Gregory's New South Wales State Road Map, Map 220, 11th Edition, Gregory's Publishing Company
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_மலைகள்&oldid=2407376" இலிருந்து மீள்விக்கப்பட்டது