நீல வளையமுள்ள எண்காலி
நீல வளையமுள்ள எண்காலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | Hapalochlaena Robson, 1929
|
இனங்கள் | |
H. fasciata |
நீல வளையமுள்ள எண்காலி அல்லது நீல வளைய சாக்குக்கணவாய் (blue-ringed octopus) என்பது எண்காலி குடும்பத்தைச் சேர்ந்த கொடிய நஞ்சுள்ள கடல்வாழ் உயிரினம் ஆகும். இதில் உள்ள நான்கு இனங்கள் இருக்கின்றன. இவற்றின் உடலில் உள்ள நீல நிற வளையங்களால் இவை இப்பெயர் பெற்றன. இவ்வகை உயிரினங்கள் பசிபிக் பெருங்கடல் , இந்தியப் பெருங்கடல் பகுதியில் சப்பானில் இருந்து ஆத்திரேலியா வரையிலான கடல் பகுதியின் அலை குளங்கள், பவளப் பாறைகள் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றின் முதன்மை வாழிடப்பரப்பு என்பது நியூ சவுத் வேல்ஸ்,தெற்கு ஆஸ்திரேலியா, மற்றும் வடக்கு மேற்கு ஆஸ்திரேலியாவைச் சுற்றி உள்ளது.[1][2] இவை உலகின் மிக ஆபத்தான கடல்விலங்காக குறிப்பிடப்படுகின்றன.[3] இவை சிறியதாக 12 முதல் 20 cm (5 முதல் 8 அங்) அளவிலானவையாக உள்ளன. மேலும் ஒப்பீட்டளவில் மந்தமான இயல்புயவையாக உள்ளவை, இவற்றை தொடுவது மனிதர்களுக்கு ஆபத்தானது. இவற்றின் நஞ்சு, மனிதர்களைக் கொல்ல போதுமான சக்திவாய்ந்ததாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Surf Lifesaving Training Manual, 32nd edition
- ↑ CBS News http://www.cbsnews.com/8301-202_162-57591718/tiny-but-deadly-spike-in-blue-ringed-octopus-sightings-sparks-fear-of-invasion-in-japan/ பரணிடப்பட்டது 2013-10-02 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Ocean's Deadliest: The Deadliest Creatures -- Greater Blue-Ringed Octopus". Animal Planet.