நுகலா இராமச்சந்திர ரெட்டி
நுகலா இராமச்சந்திர ரெட்டி (Nukala Ramachandra Reddy) தெலுங்கானாவின் பிரபலமான அரசியல்வாதி ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுநுகலா இராமச்சந்திரா ரெட்டி தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள மகபூபாபாத்திலிருந்து (முன்பு மனுகோட்டா என அழைக்கப்பட்டது) 4 கி.மீ. தொலைவில் உள்ள ஜமண்டலபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். நுகல ரங்கசாய் ரெட்டி மற்றும் ருக்மணி தேவியின் மகனாகப் பிறந்த இவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர்.
அரசியல் வாழ்க்கை
தொகுவாரங்கல் மாவட்டத்தில் உள்ள டோர்னகல் தொகுதியிலிருந்து 1957, 1962, 1967 மற்றும் 1972 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1972ல் போட்டியின்றி வெற்றி பெற்றார். இவர் நான்கு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.[2]. 1960-ல், தாமோதரம் சஞ்சீவய்யா அமைச்சரவையில் உணவு, வேளாண்மை, தொழிலாளர் மற்றும் நிலச் சீர்திருத்த அமைச்சராகப் பதவியேற்றார். 1962-ல் அவர் நீலம் சஞ்சீவ ரெட்டி அமைச்சரவையில் வருவாய் மற்றும் நில சீர்திருத்த அமைச்சராக சேர்ந்தார். ஏப்ரல் 27, 1964-ல் நிர்வாக சீர்திருத்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1964 முதல் 1967 வரை, காசு பிரம்மானந்த ரெட்டி அமைச்சரவையில் வருவாய் நிலச் சீர்திருத்த அமைச்சராகப் பணியாற்றினார். 1973 ஆம் ஆண்டு ஜலகம் வெங்கலராவ் அமைச்சரவையில் நிதி மற்றும் வணிக வரி அமைச்சராக சேர்ந்தார்.[3].
இறப்பு
தொகுநுகலா ராமச்சந்திர ரெட்டி சூலை 27, 1974 அன்று தனது 55வது வயதில் மாரடைப்பால் காலமானார்.[4] மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி அப்போதைய ஆந்திர மாநில அரசு இவருக்கு இறுதிச் சடங்கு நடத்தியது.
இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "ఆర్కైవ్ నకలు". Archived from the original on 2020-06-12. பார்க்கப்பட்ட நாள் 2020-06-12.
- ↑ https://epaper.ntnews.com/Home/ShareArticle?OrgId=475664ea&imageview=1
- ↑ https://epaper.ntnews.com/home/index?date=02/07/2020&eid=1&pid=173745
- ↑ https://epaper.ntnews.com/Home/ShareArticle?OrgId=475664ea&imageview=1