நுகுனோனு (ஆங்கில மொழி: Nukunonu) என்பது தென் பசிபிக் கடலில் அமைந்திருக்கும் நியூசிலாந்தின் ஒரு பகுதியான டோக்கெலாவின் மிகப்பெரிய பவளத் தீவு ஆகும்.[1] இது மத்திய கடற்காயலால் சூழப்பட்டுள்ள 30 சிறு தீவுகளைக் கொண்டுள்ளது. இதன் மொத்தப் நிலப் பரப்பளவு 5.5 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். அத்துடன் இதன் கடற்காயல் மேற்பரப்புப் பரப்பளவு 109 சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.[2] தென்னை, தாழை, உப்பு ஆகியவையும் மீன்பிடியும் அங்கு வாழும் மக்களின் பிரதான பொருளாதாரத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்களும், வேலையும் ஆகும்.

நுகுனோனுவின் செய்மதிப்படம்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுகுனோனு&oldid=2747455" இலிருந்து மீள்விக்கப்பட்டது