நுமலிகர் சுத்திகரிப்பு நிலையம்

இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

நுமலிகர் சுத்திகரிப்பு நிலையம் (Numaligarh Refinery) இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள கோலகாட் மாவட்டத்தின் மொராங்கி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனம் மற்றும் அசாம் அரசாங்கம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியே நுமலிகர் சுத்திகரிப்பு நிலையமாகும். தொடக்கத்தில் இந்திய எண்ணெய் நிறுவனம் 74 சதவீதமும் மற்றும் அசாம் அரசாங்கம் 26 சதவீதமும் இச்சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உரிமை கொண்டு செயல்படுகின்றன.[1] 1999 ஆம் ஆண்டு சூலை மாதம் 9 ஆம் நாள் நுமலிகர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்நிலையம் ஆண்டுக்கு 3 மில்லியன் மெட்ரிக் டன் சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்டதாக இருந்தது.[2]

2019 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நுமலிகர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை ஆண்டுக்கு 9 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்த்தும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.[3]

நோக்கம்

தொகு
  • சுத்திகரிப்பு திறன் பயன்பாட்டை அதிகரித்தல்,
  • திறமையான சுத்திகரிப்பு செயல்பாட்டின் மூலம் தயாரிப்பு முறையை மேம்படுத்துதல்,
  • தயாரிப்புகளை சரியான நேரத்தில் வெளியேற்றுவதை உறுதிசெய்து, சிறந்த வாடிக்கையாளர் தளத்தையும் தேவையான சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பையும் உருவாக்குதல்,
  • தரம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் மிக உயர்ந்த தரங்களை அடைதல்,
  • முறையான பயிற்சி மற்றும் தொழில் திட்டமிடல் மூலம் மனித வளத்தின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்துதல்,
  • பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவுதல் போன்றவை நுமலிகர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டமைக்கான நோக்கங்களாகும்.

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்