நுராகி தொல்லியல் பண்பாடு
நுராகி தொல்லியல் பண்பாடு (Nuragic civilization),என்பது இத்தாலி நாட்டின் தெற்கில் மத்தியதரைக் கடலில் உள்ள் சார்டினியா பகுதியில் வெண்கலக் காலத்தில்[1] கிமு 1600 மற்றும் கிமு 1200க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட பெரிய அளவிலான கூம்பு வடிவிலான நுராகி எனப்படும் கல் கோபுரங்களாகும். ஏறத்தாழ தேன்கூடு வடிவ 7,000 நூராகிகள் கற்களால் ஒன்றன் மேல் ஒன்றாக கவனமாக அடுக்கி கட்டப்பட்டுள்ளது. இந்த நுராகிகள் யுனெஸ்கோவில் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
நுராகிப் பண்பாட்ட்டின் வெண்கல கால சர்டினியர்கள் இந்தக் கம்பீரமான கோபுரங்களை ஏன் கட்டினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இத்தொல்லியல் களததில் நீண்ட அங்கி அணிந்த சார்டினிய தலைவரின் மார்பில் குத்துவாள் உள்ள சிலை உள்ளது. மேலும் உயரமான மற்றும் அகலமான விளிம்புகள் கொண்ட தொப்பிகளுடன் நேராக ஆடை அணிந்த பெண் உருவங்கள் மத குருமார்களாக கருதப்படுகிறது. மற்றவர்களின் சிலைகள் வீரர்கள் மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொள்பவர்கள். பல சிலைகள் உணவுப் பரிசுகளைக் கையில் கொண்டுள்ளது. ஒருவர் தோளில் ஒரு சிறிய ஆடு தொங்கிக்கொண்டு உள்ளது. இவை அனைத்தும் நுராகி சமூகத்தின் அனைத்துவிதமான அம்சங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இத்தாலின் தேசிய தொல்பொருள் அருங்காட்சியகம் கூறுகிறது.
பெரும்பாலான வெண்கலச் சிற்பங்கள் போர் வீரர்களைக் குறிக்கும் வகையில் இருப்பதால் நுராகி பண்பாட்டு மக்கள் இராணுவப் பிரிவுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட போர்த்திறம் மிகுந்த வீரர்களாக இருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வாள், தடிகளை ஏந்தியுள்ள வீரர்கள் மற்றும் வில் வித்தையாளர்கள் கொம்புகள் கொண்ட தலைக்கவசத்தையும் உயர் உலோக கழுத்துப் பட்டைகளையும் அணிந்துள்ளனர். பலர் கைகளில் வட்டவடிவிலான தடுப்புக் கவசங்கள் உள்ளது. சிலரிடம் எதிரிகளைப் பயமுறுத்துவதற்கான முகக்கவசம் மற்றும் முழுமையான பாதுகாப்பு கவசங்கள் உள்ளது.
நுராகி தொல்லியல் பண்பாடு குறித்த கல்வெட்டுக்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.[2] நுராகி பண்பாடு தொடர்பாக குறிப்புகள் பண்டைய கிரேக்கம் மற்றும் உரோம செந்நெறி இலக்கியங்கள் மூலம் மட்டும் தெரியவருகிறது. இக்குறிப்புகள் புராணக்கதையாக அல்லது வரலாறாக இருக்கலாம்[3]
பண்பாடு
தொகுபுனித கிணறுகள்
தொகுபுனித கிணறுகள் கட்டமைப்புகள் நீர் வழிபாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.[4]நுராகி புனிதக் கிணறுகளின் கட்டிடக்கலையானது வட்ட வடிவ அறையைக் கொண்டுள்ளது. உச்சியில் ஒரு துளையுடன் தோலோஸ் பெட்டகத்துடன் உள்ளது. ஒரு நினைவுச்சின்ன படிக்கட்டு இந்த நிலத்தடி ஹைபோஜியம் அறையின் நுழைவாயிலை இணைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய பங்கு புனித நீரூற்றின் தண்ணீரை சேகரிப்பதாகும். வெளிப்புறச் சுவர்களில் கல்லால் ஆன அமரும் இடங்கள் உள்ளது. அங்கு விசுவாசிகளால் செலுத்தப்படும் காணிக்கைகள் மற்றும் மதப் பொருள்கள் வைக்கப்பட்டது. சில இடங்களில் பலிபீடங்களும் இருந்தன. சில அறிஞர்கள் இவை நூராகி பண்பாட்டின் முதன்மை தெய்வங்களில் ஒன்றான சர்துசுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Cicilloni, Riccardo; Cabras, Marco (2014-12-22). "Aspetti insediativi nel versante oreintale del Monte Arci (Oristano -Sardegna) tra il bronzo medio e la prima età del ferro" (in it). Quaderni (Soprintendenza Archeologia, belle arti e paesaggio per la città metropolitana di Cagliari e le province di Oristano e Sud Sardegna) (25): 84. பன்னாட்டுத் தர தொடர் எண்:2284-0834. https://quaderniarcheocaor.beniculturali.it/index.php/qua/article/view/116/115. பார்த்த நாள்: 2022-10-23.
- ↑ Monoja, M.; Cossu, C.; Migaleddu, M. (2012). Parole di segni, L'alba della scrittura in Sardegna. Sardegna Archeologica, Guide e Itinerari. Sassari: Carlo Delfino Editore.
- ↑ Perra, M. (1993). La Sardegna nelle fonti classiche. Oristano: S'Alvure editrice.
- ↑ Campus, Franco; Leonelli, Valentina; Lo Schiavo, Fulvia. "La transizione culturale dall'età del bronzo all'età del ferro nella Sardegna nuragicain relazione con l'Italia tirrenica" (PDF). beniculturali.it. Bollettin o di Archeologia Online (in இத்தாலியன்). Archived from the original (PDF) on 2016-09-24. பார்க்கப்பட்ட நாள் 2017-07-30.
ஆதாரங்கள்
தொகு- Webster, G.S. (1996). A Prehistory of Sardinia 2300-500 BCE. Monographs in Mediterranean Archaeology. Sheffield Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1850755081.
- Atzeni, Enrico (1981). Ichnussa. La Sardegna dalle origini all'età classica. Milan.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - Lilliu, Giovanni (1967). La civiltà in Sardegna nei secoli. Turin: ERI.
- Bernardini, Paolo (2010). Le torri, i metalli, il mare. Sassari: Carlo Delfino Editore.
- Depalmas, Anna (2005). Le navicelle di bronzo della Sardegna nuragica. Cagliari: Gasperini.
- Dyson, Stephen L.; Rowland, Robert J. (2007). Shepherds, sailors, & conquerors - Archeology and History in Sardinia from the Stone Age to the Middle Ages. Museum of Archeology and Anthropology. Philadelphia: University of Pennsylvania. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-934536-02-5.
- Foddai, Lavinia (2008). Sculture zoomorfe. Studi sulla bronzistica figurata nuragica. Cargeghe: Biblioteca di Sardegna.
- Laner, Franco (2011). Sardegna preistorica, dagli antropomorfi ai telamoni di Monte Prama, Sa 'ENA. Cagliari: Condaghes.
- Lilliu, Giovanni (1966). Sculture della Sardegna nuragica (PDF). Cagliari: La Zattera. Archived from the original (PDF) on 2013-12-24. பார்க்கப்பட்ட நாள் 2022-10-23 – via Book online from Sardegnadigitallibrary.it ed. 2008 Illisso.
- Marcus, Joseph H. et al. (February 24, 2020). "Genetic history from the Middle Neolithic to present on the Mediterranean island of Sardinia". Nature Communications (Nature Research) 11 (939): 939. doi:10.1038/s41467-020-14523-6. பப்மெட்:32094358. Bibcode: 2020NatCo..11..939M.
- Melis, Paolo (2003). Civiltà nuragica. Sassari: Delfino Editore.
- Montalbano, Pierluigi (July 2009). SHRDN, Signori del mare e del metallo. Nuoro: Zenia Editrice. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-904157-1-5.
- Navarro i Barba, Gustau (2010). La Cultura Nuràgica de Sardenya. Barcelona: Edicions dels A.L.I.LL. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-613-9278-0.
- Pallottino, Massimo (2000). La Sardegna nuragica. Nuoro: edizioni Ilisso. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-87825-10-7.
- Perra, Mario (1997). ΣΑΡΔΩ, Sardinia, Sardegna. Oristano: S'Alvure.
3 Volumes
- Pittau, Massimo (2001). La lingua sardiana o dei protosardi. Cagliari: Ettore Gasperini editore.
- Pittau, Massimo (2007). Storia dei sardi nuragici. Selargius: Domus de Janas editrice.
- Pittau, Massimo (2008). Il Sardus Pater e i Guerrieri di Monte Prama. Sassari: EDES.
- Pittau, Massimo (2011). Gli antichi sardi fra I "Popoli del mare". Selargius: Domus de Janas editrice.
- Pittau, Massimo (2013). La Sardegna nuragica. Cagliari: Edizioni della Torre.
- Scintu, Danilo (2003). Le Torri del cielo, Architettura e simbolismo dei nuraghi di Sardegna. Mogoro: PTM editrice.
- Vacca, E.B. (1994). La civiltà nuragica e il mare. Quartu Sant'Elena: ASRA editrice.
மேலும் படிக்க
தொகு- Balmuth, Miriam S. (1987). Nuragic Sardinia and the Mycenaean World. Oxford, England: B.A.R.
- Webster, Gary S. (2015). The Archaeology of Nuragic Sardinia. Bristol, CT: Equinox Publishing Ltd.
- Zedda, Mauro Peppino (2016). "Orientation of the Sardinian Nuragic 'meeting huts'". Mediterranean Archaeology & Archaeometry 16 (4): 195–201.