நுரையீரல் மிதவை சோதனை
நுரையீரல் மிதவை சோதனை (Lung float test) என்பது நீர்ம அழுத்தடச் சோதனை அல்லது டோசிமாசியா என்றும் அழைக்கப்படுகிறது.[1]
விளக்கம்
தொகுநுரையீரல் மிதவை சோதனை என்பது, சர்ச்சைக்குரிய பிணக்கூறு ஆய்வு முறையாகும். இம்முறையில் நுரையீரல் சுவாசத்திற்கு உட்பட்டதா என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுகிறது. சிசுக்கொலை எனச் சந்தேகிக்கப்படும் சந்தர்ப்பங்களில் இச்சோதனை வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சோதனையில் ஒரு குழந்தை இறந்து பிறந்ததா இல்லையா என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது. இச்சோதனைக்கு உட்படுத்தப்படும் நுரையீரல், தண்ணீரில் மிதக்கும் போது நுரையீரலில் காற்றோட்டம் இருந்ததாகக் கருதப்படுகிறது. நீரில் மூழ்கும் நுரையீரல் காற்று இல்லாமல் இருந்ததைக் குறிக்கிறது.
இச்சோதனை தவறானது அல்ல ஆனால் பல காரணிகள் சோதனையின் முடிவினை தவறான நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையான முடிவுகளைக் கொடுக்கக்கூடும். இறப்பிற்குப் பின் நுரையீரல் சிதைவதால் வாயுக்கள் உருவாகும், இதனால் பிரேதப் பரிசோதனையில் காற்றோட்டமில்லாத நுரையீரல் மிதக்கக் காரணமாகிறது.[2] குழந்தைப் பிறப்பின் போது பிறப்பு பாதையில் மரணமடைந்த குழந்தையின் உடல் நகரும் போது நுரையீரல் உள்ளே காற்று செல்லலாம். இவ்வாறு காற்று நுழைந்த நுரையீரல் எப்போதும் மிதப்பதில்லை.[3] க்ரோஸ் ஆஸ்டெண்டோர்ஃப் மற்றும் இவரைச் சார்ந்தவர்களின் சோதனைகளில் 2% தவறான முடிவைக் காட்டியது.[4] 1997ஆம் ஆண்டு ஒரு ஆய்வறிக்கையில், ஜே.ஜே.மோர் நேரடி பிறப்பை தவறாகக் கண்டறியும் அபாயத்தை வலியுறுத்துகிறார், "பிரேத பரிசோதனையில் காணப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் மாறுபட்ட அளவிலான சிதைவின் அறிகுறிகளைக் காட்டுகின்றன. ஏனெனில் இக்குழந்தைகளில் பெரும்பாலவை குப்பைகளில் காணப்பட்டன. செய்தித்தாள் அல்லது நெகிழிப் பைகளினால் மூடப்பட்டிருந்தன அல்லது திறந்தவெளியில் காணப்பட்டன. நுண்ணிய அளவில் கெட்டுப்போன விரிவாக்கப்படாத நுரையீரல் கூட வாயு உருவாக்கத்தால் மிதக்கலாம். இயற்கையாக, புத்துயிர் பெறுவதற்கான எந்தவொரு முயற்சியும் புதிதாகப் பிறந்த குழந்தையின் நுரையீரலை ஓரளவு விரிவுபடுத்தி, நேரடி பிறப்பை நிறுவுவது மேலும் சிரமத்திற்கு வழிவகுக்கும்." [5]
கருவின் நுரையீரலுக்கும் ஒரு குழந்தையின் நுரையீரலுக்கும் உள்ள வேறுபாட்டை பண்டைய கிரேக்க மருத்துவர் கலென் குறிப்பிட்டார்.[6] நுரையீரல் மிதவை சோதனை 1670களில் ஹங்கேரிய தாவரவியலாளர் கோரோலி ரேஜரால் விவரிக்கப்பட்டு, 1681இல் முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டது.[7] ஜெர்மன் மருத்துவர் ஜோஹன்னஸ் ஷ்ரேயர் 1690இல் நுரையீரல் மிதவை பரிசோதனை செய்தார். [8]
சுவாசம் மற்றும் உயிருடன் கூடிய பிறப்பைத் தீர்மானிக்க நுரையீரல் மிதவை பரிசோதனையின் பயன்பாடு பல மருத்துவ-சட்டரீதியான கருத்துக்களைக் கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்கா சட்டத்தின் கீழ் சுவாசிக்கும் கரு ஒரு நபராகக் கருதப்பட வேண்டும். [9]
சந்தேகத்திற்கு இடமானவர் நீரில் மூழ்கியிருந்ததா என்பதை அறிய தடயவியல் நோயியல் வல்லுநர்களால் நுரையீரல் மிதவை சோதனைகளைப் பயன்படுத்துகின்றனர். [10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hart, Alexandra (2008). "Docimasia pulmonum hydrostatica: From Galen to Ploucquet and back again". Historia Medicinae 1 (1): E04. பன்னாட்டுத் தர தொடர் எண்:1946-3316. http://www.medicinae.org/e04. பார்த்த நாள்: 2021-01-09.
- ↑ Clark, Werner U. (2004). Spitz and Fisher's Medicolegal Investigation of Death: Guidelines for the Application of Pathology to Crime Investigation. p. 347.
- ↑ "UK Professor Disproves Float Test to Seek Justice for Jailed Women in El Salvador". October 28, 2014. http://www.newswise.com/articles/uk-professor-disproves-float-test-to-seek-justice-for-jailed-women-in-el-salvador.
- ↑ "Is the lung floating test a valuable tool or obsolete? A prospective autopsy study". International Journal of Legal Medicine 127 (2): 447–51. March 2013. doi:10.1007/s00414-012-0727-1. பப்மெட்:22733108.
- ↑ Moar, JJ (March 1997). "The hydrostatic test--a valid method of determining live birth?". The American Journal of Forensic Medicine and Pathology 18 (1): 109–10. doi:10.1097/00000433-199703000-00027. பப்மெட்:9095314.
- ↑ Smith, Sydney (1951). "History and Development of Forensic Medicine". British Medical Journal 1 (4707): 599–607. doi:10.1136/bmj.1.4707.599. பப்மெட்:14821487.
- ↑ Hirt, M.; Kovác, P.; Matejů, E. (October 2005). "History of Forensic Medicine – the Third Part. The Development and History of Forensic Medical Science in Middle Europe". Soud Lek 50 (4): 57–60. பப்மெட்:16381303. https://www.researchgate.net/publication/7390702.
- ↑ Alfsen, G. Cecilie; Ellingsen, Christian Lycke; Hernæs, Lotte (2013). ""The child has lived and breathed." Forensic examinations of newborns 1910–1912". Tidsskrift for den Norske Laegeforening 133 (23/24): 2498–2501. doi:10.4045/tidsskr.13.0898. பப்மெட்:24326503. http://tidsskriftet.no/article/3115854/en_GB.
- ↑ Le Roux-Kemp, Andra; Wilkinson, Jacques (2012). "A novel application of the hydrostatic test in determining live (non)-birth". South African Journal of Criminal Justice (2): 271–285. https://www.academia.edu/2235527.
- ↑ Becker, Ronald F.; Dutelle, Aric W. (2013). Criminal Investigation (4th ed.). Burlington, Mass.: Jones & Bartlett Learning. p. 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4496-0215-4.