நூருல் அமீன் விளையாட்டரங்கம்

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ளது

நூருல் அமீன் விளையாட்டரங்கம் (Nurul Amin Stadium) இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள நகோன் நகரத்தில் அமைந்துள்ளது. பல்நோக்கு விளையாட்டரங்கமான இது நவ்காங்கு விளையாட்டு அரங்கம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. முக்கியமாக கால்பந்து, துடுப்பாட்டம் மற்றும் பிற விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு இவ்விளையாட்டு அரங்கம் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொர் ஆண்டும் ஆகத்து மற்றும் செப்டம்பர் மாதங்களில் மதிப்புமிக்க சுதந்திர தின கோப்பை கால்பந்து போட்டி இங்கு நடைபெறுகிறது. தேசிய புகழ் பெற்ற பெரும்பாலான அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.[1]

நூருல் அமீன் விளையாட்டரங்கம்
Nurul Amin Stadium
முழுமையான பெயர்நூருல் அமீன் விளையாட்டரங்கம்
முன்னாள் பெயர்கள்நவ்காங்கு விளையாட்டரங்கம்
அமைவிடம்நகோன்,அசாம்
உரிமையாளர்நகோன் நகராட்சி வாரியம்
இயக்குநர்நகோன் நகராட்சி வாரியம்
Construction
Broke ground1958
திறக்கப்பட்டது1958
Website
Cricinfo

1964 ஆம் ஆண்டு முதல் அசாம் துடுப்பாட்ட அணி 1989 ஆம் ஆண்டு பீகார் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய போது[2] வரை இந்த அரங்கத்தில் எட்டு ரஞ்சிக் கோப்பை போட்டிகளை நடந்துள்ளன.[3] அதன் பின்னர் இங்கு சாதாரண போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன.[4] அசாமில் புகழ்பெற்ற விளையாட்டு நிர்வாகியாக இருந்த நூருல் அமீனின் நினைவாக இந்த விளையாட்டரங்கத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Abhishek Ganguly (Oct 5, 2018). "Mohammedan Sporting to open campaign in All India Independence Cup | Football News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Archived from the original on 11 December 2021. பார்க்கப்பட்ட நாள் 5 December 2021. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. Scorecard
  3. First-class matches
  4. Other matches