நெகிரிட்டோ மக்கள்
மலேசியப் பழங்குடி மக்களில் முப்பெரும் பிரிவுகள் உள்ளன. அந்தப் பிரிவுகளில் செமாங் மக்கள் (Semang) அல்லது நெகிரிட்டோ மக்கள் (Negrito) என்பவர்கள் மலாய் தீபகற்பத்தில் உள்ள ஒரு பழங்குடி மக்கள் பிரிவினர் ஆகும். [1]இவர்கள் தீபகற்ப மலேசியாவின் வட எல்லைப் பகுதிகளிலும் பேராக், கெடா, பகாங் மாநிலங்களிலும் வாழ்கின்றனர். இவர்களை சக்காய் என்று அழைப்பதும் உண்டு. "சக்காய்" என்பது ஒரு தரக் குறைவான சொல். அதற்கு அடிமை என்று பொருள்.
ஈட்டியுடன் ஒரு லூசன் நெகிரித்தோ | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
இந்தியா, கடல்சார் தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட புவியியல் பகுதிகள் | |
மொழி(கள்) | |
அந்தமான் மொழிகள், அசிலியான் மொழிகள், பிலிப்பீன் நெக்ரித்தோ மொழிகள் | |
சமயங்கள் | |
ஆன்மவாதம், நாட்டுப்புற மதம், அனித்தோ, கிறித்தவம், இசுலாம், பௌத்தம், இந்து சமயம் |
துணைப்பிரிவுகளும் மக்கள் தொகையும்
தொகுதீபகற்ப மலேசியாவில் நெகரிட்டோ மக்களின் தொகை மொத்தம் 3,507. இந்த நெகரிட்டோ மக்களில் ஆறு பிரிவுகள் உள்ளன. அதன் விவரம் வருமாறு:
- பாத்தேக் பிரிவு 1,519 பேர்கள்
- ஜஹாய் பிரிவு 1,244 பேர்கள்
- கென்சியு பிரிவு 254 பேர்கள்
- கின்டக் பிரிவு 150 பேர்கள்
- லானோ பிரிவு 173 பேர்கள்
- மென்ரிக் பிரிவு 167 பேர்கள்
ஆக மொத்தம்: 3,507 பேர்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Southeast Asian Negrito". Archived from the original on 2015-09-18. பார்க்கப்பட்ட நாள் 2016-06-09.