நெகோயிட்டு

சிலிக்கேட்டு கனிமம்

நெகோயிட்டு (Nekoite) என்பது வெண்மை நிறத்திலுள்ள ஒரு சிலிக்கேட்டு வகை கனிமமாகும். Ca3Si6O15·7H2O என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படுகிறது. முச்சாய்வு கட்டமைப்பில் இக்கனிமம் காணப்படுகிறது. கால்சியம், சிலிக்கான், ஆக்சிசன் மற்றும் நீர் ஆகியவை நெகோயிட்டு கனிமத்தின் உட்கூறுகளாக உள்ளன. முதன்முதலில் 1956 ஆம் ஆண்டில் இது கண்டறியப்பட்டது.[2][3] உட்குடைவுப்பள்ளங்களையுடைய அடர்பாறைக்கல்லில் நெகோயிட்டு கனிமம் காணப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் நிறுவனம் நெகோயிட்டு கனிமத்தை Nk என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

Nekoite
[[Image:
|260px]]
அரிசோனாவில் கிடைத்த நெகோயிட்டு கனிமம்
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுCa3Si6O15·7H2O
இனங்காணல்
நிறம்வெண்மை
படிக அமைப்புமுச்சரிவு
பிளப்புதனித்துவம்
கீற்றுவண்ணம்White
அடர்த்தி2.21 கி/செ.மீ3
நிறப்பிரிகைr > பலவீனமானது
மேற்கோள்கள்[1]

பெயர்க்காரணம்

தொகு

ஓகெனைட்டு என்ற கனிமத்தின் பெயரிலிருந்து நெகோயிட்டு என்ற பெயர் வந்துள்ளது. முதலில் இது தவறாகக் கருதப்பட்டது.[3]

பண்புகள்

தொகு

நெகோயிட்டு ஒளிஊடுருவக்கூடிய ஒரு படிகமாகும். முத்து வெள்ளை நிறத்தைக் கொண்டுள்ளதாக விவரிக்கப்படுகிறது. கண்ணாடி போன்ற பளபளப்பைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.mindat.org/min-2872.html
  2. "Nekoite Mineral Data". webmineral.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-04.
  3. 3.0 3.1 3.2 "Nekoite". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2023-02-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெகோயிட்டு&oldid=3890507" இலிருந்து மீள்விக்கப்பட்டது