நெய்ச்சுலி-யு நிக்கி அராலு

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி

நெய்ச்சுலி-யு-நிக்கி அராலு (Neichülie-ü Nikki Haralu)(28 சூலை 1918 - 2 செப்டம்பர் 2016) 1978-80 வரை பனாமா, கோஸ்டா ரிக்கா மற்றும் நிக்கராகுவா ஆகிய நாடுகளுக்கு இந்தியத் தூதராக பணியாற்றிய நாகாலாந்தின் அனுபவமிக்க இந்திய தூதர் ஆவார்.[1] இந்தியத் வெளியுறவுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, நாகாலாந்து மாநில சமூக நல ஆலோசனை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

நெய்ச்சுலி-யு நிக்கி அராலு
பிறப்புநெய்ச்சுலி-யு நிக்கி அராலு
(1918-07-28)28 சூலை 1918
கோகிமா, நாகா மலை மாவட்டம் (தற்போது நாகலாந்து)
இறப்பு2 செப்டம்பர் 2016(2016-09-02) (அகவை 98)

வாழ்க்கை தொகு

அராலு அப்போதைய நாகா மலை மாவட்டத்தில் உள்ள கோகிமாவில் மருத்துவர் அரிஎலுங்பே அராலுவுக்கு மகனாகப் பிறந்தார். கோகிமா மற்றும் சில்லாங்கில் பள்ளிப்படிப்பைப் பெற்றார். இவர் 1948-ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இசுகாட்டிசு தேவாலய கல்லூரியில் பட்டம் பெற்றார். இவர் 1953ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஹேவர்போர்டில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "List of Indian Ambassador". Indian Embassy in Panama.
  2. "N N Haralu life testimony". Morung Express.